சரித்திரம் திரும்ப வேண்டாம்.. வண்ணாங்குண்டு ஊராட்சியில் இறால் பண்ணைக்கு எதிர்ப்பு..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் வண்ணாங்குண்டு ஊராட்சிக்கு உள்பட்ட மரைக்காயர் நகர் பகுதியில் சுமார் 40 ஏக்கரில் தனிநபர்கள் மீன் பண்ணை துவங்க ஆரம்பகட்ட வேலை நடைபெற்று வருகிறது.

இதில் மரைக்காயர் நகர் பகுதியை சுற்றி பெரியபட்டினம் ஊராட்சிக்கு உள்பட்ட பெரியபட்டினம், குருத்தமண்குண்டு, தெற்கு புதுகுடியிருப்பு, கரிச்சான் குண்டு என்ற காந்தி நகர், வடக்கு புதுகுடியிருப்பு, முத்தரையர் நகர், மங்கம்மா நகர், வண்ணாங்குண்டு ஊராட்சிக்கு உள்பட்ட மரைக்காயர் நகர், மதினா நகர், கிருஷ்ணாபுரம், இலங்காமணி, கல்லுக்காடு, கும்மிட்டான் பள்ளி, களிமண்குண்டு ஊராட்சிக்கு உள்பட்ட தோப்பு வலசை ஆகிய குக்கிராமங்கள் அமைந்துள்ளது

இப்பகுதியில் சுமார் 3000 க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றார்கள் இக்குடும்பங்களில் சுமார் 40000 க்கும் அதிகமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் மீன்பண்ணை அமைந்தால் மேற்கண்ட குக்கிராமங்களின் நிலத்தடிநீர் ஆதாரம் மாசுபட்டு குடிநீர்ருக்கு தின்டாடும் நிலை ஏற்படுவதோடு நிலத்தடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டால் மேற்கண்ட குக்கிராமங்களில் உள்ள நிளம், மரம், செடி, கொடிகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும் சூழ்நிலை உறுவாகும். இதனால் கால்நடைகளும் பாதிப்புகளுக்குள்ளாகும்.

கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இதே இடத்தில் இறால் பண்ணை ஆரம்பிக்கப்பட்டு இப்பகுதி பாலைவனம்மாகி சட்டபோராட்டத்திற்கு பின்பு அந்த இறால்பண்ணைகள் காலி செய்யப்பட்டு அந்த இறால் பண்ணையால் பாதிப்புக்குள்ளான அப்பகுதி நில உரிமையாளர்களுக்கு இறால் பண்ணை உரிமையாளர்களிடம்மிருந்து நஷ்டஈடு பெறப்பட்டது. எனவே பெரியபட்டினத்திற்க்கு அருகில் உள்ள வண்ணாங்குண்டு ஊராட்சிக்கு உள்பட்ட மரைக்காயர் நகர் பகுதியில் தனிநபர்ரால் அமைக்க உள்ள மீன் பண்ணை அமைக்க இராமநாதபுரம் மீன்துறை அலுவலகத்தில் இருந்தோ அல்லது மாசு கட்டுபாடு மற்றும் சுற்றுச் சூழல் வாரிய அலுவலகத்தில் இருந்தோ மீன் பண்ணை அமைக்க எந்த அனுமதியும் வழங்ககூடாது.

மேலும் யாரிடமும் எந்த அனுமதியும் பெறாமல் இப்பகுதியில் மீன் பண்ணை ஆரம்பித்தால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தடைசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மேற்கண்ட குக்கிராம பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..