குழந்தைகளின் கனவை நினைவாக்கும் HSF toy store..

விளையாட்டு பொம்மைகள் என்றால் ஒரு காலத்தில் வெளிநாட்டில் இருந்து அல்லது சென்னை மாநகர் போன்ற இடங்களில் இருந்து வருவதற்காக காத்திருந்த காலங்கள் இருந்ததுண்டு. பின்னர் இணையதளம் மூலம் வேண்டியதை பார்த்து வாங்கும் வகையில் எளிதாகியது. ஆனாலும் நாம் விரும்புவதை நேரில் பார்த்து, உணர்ந்து வாங்குவது போல் திருப்தி கிடைப்பது கிடையாது. அதுவும் குழந்தைகளுக்கு வாங்கும் பொருட்களாக இருந்தால் நாம் அதிக கவனம் செலுத்துவோம்.

அக்குறையை நீக்க தற்சமயம் கீழைநகரில் குழந்தைகளின் விளையாட்டு பொருட்களுக்காகவே உருவாகியுள்ளது HSF TOY STORE. இக்கடையில் வெளிநாட்டு விளையாட்டு பொருட்களும், வெளிநாட்டு தரத்தில் உள்நாட்டு பொருட்களும் நியாயமான விலைகளில் விற்கப்படுகிறது.

இக்கடையில் வெறும் பொம்மைகளுடன் மட்டும் நிறுத்தி கொள்ளாமல், பொருள் வாங்க வரும் குழந்தைகளின் மனம் கவரும் வகையில் தரமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சாக்லேட் மற்றும் பிஸ்கட் வகைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இக்கடை எல்லோரும் எளிதில் அணுகும் வகையில் வள்ளல் சீதக்காதி சாலையில் ( ஜும்மா பள்ளி மற்றும் மூர் டிராவல்ஸ் எதிர்புறம்) திறக்கப்பட்டுள்ளது. மேலும் இது கீழைநகருக்கு புதிய முயற்சியாக இருந்தாலும், மக்கள் மனதை கவரும் என்பதில் ஐயமில்லை.