வடக்குத்தெரு முகைதீனியா பள்ளியில் நாளைய உலகம் நமதாகட்டும் நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது.

கீழக்கரை வடக்குத்தெரு முகைதீனியா பள்ளியில் நாளைய உலகம் நமதாகட்டும் என்ற தலைப்பில் உம்மத்திற்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி இன்று (05-05-2018) மாலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வை வடக்குத்தெரு சமூக நல அமைப்பு ( NASA) மற்றும் தமிழ்நாடு இஸ்லாமிய கல்வி இயக்கம் ஆகியோர் இணைந்நு நடத்தினர்.

இந்நிகழ்ச்சியின் வரவற்புரையை ஃபர்கான் பின் அஷ்ரஃப் வழங்கினார். நிகழ்ச்சியின் தலைமையுரையை முகைதீனியா பள்ளி நிர்வாக குழு உறுப்பினர் ரஃபீக் பசீர் அகமது ஆகியோர் வழங்கினார். பின்னர் எது கல்வி மற்றும் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கா.பைசல் அஹமது சிறப்புரையும், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் உயர்கல்வி ஆலோசகர் எம்.முஹம்மது இஸ்மாயில் என்ன படிக்கலாம் மற்றும் எது நம் இலக்கு என்ற தலைப்பில் விழிப்புணர்வு தரும் உரையும் வழங்கினார்கள்.

இந்நிகழ்வில் வடக்குத் தெரு ஜமாத் நிர்வாகிகள், முகைதீனியா பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள், மாணவச் செல்வங்கள் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சிகான அனைத்து ஏற்பாடுகளையும் வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.