சென்னையில் இயற்கை ஆரோக்கியத்தை வலியுறுத்தும் “arogya”கண்காட்சி..

சென்னையில் மே மாதம் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வணிக வளாகத்தில் “arogya” “ஆரோக்யா” எனும் இயற்கை மருத்துவ சம்பந்தமான கண்காட்சி நடைபெறுகிறது. இக்கண்காட்சி காலை 10.00 மணி முதல் மாலை 08.00 மணி வரை நடைபெறும். இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.

இக்கண்காட்சியில் இயற்கை மருத்துவமான ஹோமியோபதி, யுனானி, சித்த மருத்துவம், யோகா மற்றும் இயற்கை சார்ந்த மருத்துவம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்கம், ஆலோசனைக் கூட்டங்கள், மருத்துவ ஆலோசனைகள் போன்ற நிகழ்வுகள் நடைபெறும். மேலும் இக்கண்காட்சியில் ஆயுஸ் ஆயுர்வேத மருந்துகளும் இலவசமாக வழங்கப்படுகிறது.

இக்கண்காட்சியை Department of Indian Medicine & Homeopathy Department of Tamilnadu மற்றும் Ministry of AYUSH, Government of India ஆகிய அமைச்சக துறைகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.