இன்று உலக பத்திரிகை சுதந்திர தினம்..

மே 3ம் தேதி உலகம் முழுவதும் பத்திரிக்கை சுதந்திர தினமாக கொண்டாடப்படுகிறது.  இந்த மே3 ம் தேதி 1993ம் ஆண்டு ஐக்கிய சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த பிரகடனம் 1991ம் ஆண்டு ஆப்பிரிக்க பத்திரிகையார்களால் சமர்ப்பிக்கப்பட்ட Windhoek Declaration அறிக்கையின் அடிப்படையில் செய்யப்பட்டது. ஆக உலக பத்திரிக்கை சுதந்திர தினத்தின் பிறப்பிடம் பல்லாண்டு காலம் மனித உரிமைகள் மறுக்கப்பட்ட பூமியான ஆப்ரிக்கா என்றே கூறலாம்.

உலக சுதந்திர தினத்திற்காக சமர்ப்பிக்க பட்ட அறிக்கையின் அடிப்படை நோக்கம், பத்திரிக்கை வெளிப்படைத்தன்மை, அடிப்படை மனித உரிமை, பேச்சு சுதந்திரத்தை அடிப்படையாக கொண்டதாகும். மேலும் எந்த நாட்டில் முழுமையான பத்திரிகை சுதந்திரம் உள்ளதோ அந்நாட்டில் முழுமையான மக்களாட்சிக்கு இருக்கும் என்ற கருத்தை வலியுருத்த கூடியதாகவும் இருந்தது. ஆப்ரிக்காவில் உருவான Windhoek Declaration அறிவிப்பைத் தொடர்ந்து அதனை ஆதரிக்கும் வண்ணம் மத்திய ஆசிய நாடுகளில் Alma-Ata அறிவிப்பு, மத்திய கிழக்கு நாடுகளில் Alma-Ata அறிவிப்பு, கரீபியன் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் Santiago அறிவிப்புகள் உலக பத்திரிக்கை சுதந்திர தினத்திற்கு வலுவூட்டின.

பத்திரிகை மற்றும் ஊடகத்தின் மூலம் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அவரவர் சார்ந்த மொழிகளில் எங்கிருந்தாலும் அனைத்து விதமான செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துக்கொள்ளக் கூடிய நவீன வசதியும் இன்றைய கால கட்டத்தில் உள்ளது. இதனால் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு பத்திரிகை மற்றும் ஊடகத்தின் பயன்பாடு அளவிடற்கரியது. உலக மக்களை இணைக்கின்ற மிகப் பெரிய பாலமாக பத்திரிகை மற்றும் ஊடகம் விளங்குகிறது என்பது பத்திரிகை மற்றும் ஊடகத்தின் தனிச்சிறப்பு.

மிக முக்கியமாக பத்திரிகைகள் நடுநிலையோடு செய்திகளை வெளியிட வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பு, விருப்பம். அதனை நிலைநாட்டும் வகையில் பத்திரிகைத்துறை தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும். அதன் அடிப்படையிலேயே பத்திரிகையின் தரம் உயர்ந்து கொண்டே போக வேண்டும்.

அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பத்திரிகையும், ஊடகமும் நியாயமாக, அநீதிக்கு இடம் கொடுக்காமல், வெளிப்படையாக, நடுநிலையோடு செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு அதன் மூலம் சமுதாயம் முன்னேறி, நாடும் வளர்ச்சி பெற வேண்டும்.

பத்திரிகை மற்றும் ஊடகத்தின் தர்மம் வளர, வளர நாட்டின் வளர்ச்சியும், வெளிப்படைத்தன்மையும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.