தொடரும் இரு சக்கர வாகன விபத்து..

கீழக்கரை ஏர்வாடியில் நாகப்பட்டினத்தைச் சார்நத இளைஞர் ஒருவர் நண்பரை காண வந்த இடத்தில் விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி கிழக்கு கடற்கரை சாலையில் நாகபட்டினத்தை சேர்ந்த இளங்கோவன் (25) மாரியூரில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்காக டூவிலரில் வந்து கொண்டிருந்த போது ஏர்வாடி போஸ்ட் ஆபிஸ் அருகில் உள்ள மின் கம்பத்தில் மோதி சம்பவ இடத்திலேயே பலியாகினார்.

நெடுஞ்சாலைகள் பல எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைத்தாலும், அதிவேகத்தினாலும், கவனக் குறைவினாலும் அதிகமான விபத்துக்கள் நடந்த வண்ணமே உள்ளன. நெடுஞ்சாலைகளில் இருசக்கர வானங்களில் பயணம் செய்பவர்கள் அதி கவனத்துடன் செல்வது மிக அவசியமாகிறது.