Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கார்டூன் பார்ப்பதால் சிறுவர்களுக்கு ஏற்படும் விபரீதம்…

கார்டூன் பார்ப்பதால் சிறுவர்களுக்கு ஏற்படும் விபரீதம்…

by Mohamed

சிலந்தி மனிதன் (Spider Man) போன்ற கார்டூன் படங்கள் குழந்தைகள் முதல் பெறியவர் வரை அனைவராலும் கவரப்பட்டு வருகிறது. சில குழந்தைகள் அதை உண்மை என்று நம்பி சிலந்தி மனிதன் ( Spider Man) போல சாகசங்கள் செய்ய தூண்டப்பட்டு அந்த குழந்தைகள் விபரீதங்களையும் சந்திக்கும் சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள்.

தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் குறும்புகளை சமாளிக்கவும், வீட்டு வேலையை குழந்தைகளின் இடையூறு இல்லாமல் தொடர குழந்தைகளுக்கு கார்டூன் படங்களை பார்க்க அனுபதிக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் கார்டூன் கேம்ஸ் அடங்கிய டேப்லட் போன்ற சாதனங்களையும் குழந்தைகளுக்கு கொடுத்து விளையாட அனுமதிக்கிறார்கள்.

கார்டூனில் வரும் கதாபாத்திரங்களை உண்மையென்று நம்பி சில குழந்தைகள் அது போலவே முயற்சி செய்வதால் அச்செயல் பல விபரீதங்களுக்கு வித்திடுகின்றன.

சமீபத்தில் கிழக்கு சீனாவில் ஜியாங்சு மாகாணத்தில் சுஹோ என்ற 7 வயது சிறுவன் தனது பெற்றோருடன் ஒரு குடியிருப்பின் 10 வது மாடியில் வசித்து வந்தான். சம்பவத்தன்று டிவியில் கார்டூன் படம் ஒன்று பார்த்து கொண்டு இருந்தவன், அதில் வரும் ஹீரோ செய்யும் சாகசத்தை பார்த்த சிறுவனும் ஒரு குடையை பாராசூட் போல் நினைத்து 10 வது மாடியில் இருந்து குதித்து  விட்டான்.  ஆனால் தரையில் விழ்ந்த சிறுவனை பலத்த காயத்துடன் உடனடியாக அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து உறவினர் ஒருவர் கூறும் போது சிறுவன் டிவியில் கார்ட்டூன் படம் பார்த்து உள்ளான். அதில் வரும் ஹீரோவை பார்த்து குடையை பாராசூட்டாக பயன்படுத்தலாம் என கற்பனை செய்து இந்த காரியத்தை செய்து உள்ளான்.  நல்ல வேளை சிறுவனின் உயிருக்கு ஆபத்து இல்லை என்று அவர் கூறினார்.

ஆகையால் கார்டூன் போன்ற படங்கள் பார்க்க அனுமதிப்பதை தவிர்த்து நிஜமான வாழ்கையில் நடக்கும் சம்பவங்கள் அடங்கிய விலங்குகள், அறிவியல், இயற்கை தொடர்பான நிகழ்ச்சிகளை பார்க்க அனுமதிப்பதே சிறந்தது என மன நல நிபுணர்கள் கூறுகிறார்கள்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!