கீழக்கரை வடக்குத் தெருவைச் சார்ந்த வாலிபர் சென்னை விபத்தில் படுகாயம் – முகநூல் நட்பால் ஏற்பட்ட விபரீதமா??

கீழக்கரை வடக்குத் தெருவைச்சார்ந்த யாகூப்கான் அவர்களுடைய மகன் ரூஃபல், அவர் சென்னையில் வசித்து வந்துள்ளர். அவருக்கு முகநூல் மூலமாக நல்ல நட்பு வட்டாரம் உண்டு என்று அறியப்படுகிறது. விடுமுறை நாட்கள் இரவுகளில் நண்பர்களுடன் கடற்கரையில் சந்தித்து உரையாடி விட்டு சேர்ந்து உணவு உண்ணும் பழக்கத்தை கொண்டுள்ளார்கள். சம்பவம் நடந்த நேற்று (30-04-2017) அடுத்த நாள் விடுமுறையை முன்னிட்டு அவருடைய மதுரை எஸ்.எஸ் காலனியை சார்ந்த நண்பர் செல்வமணியுடன் இருசக்கர வாகனத்தில் மெரினா கடற்கரைக்கு சென்று மற்ற நண்பர்களை சந்தித்துள்ளார்கள்.

பின்னர் நண்பர்களுடன் திருவான்மியூர் சென்று இரவு உணவு சாப்பிட்டு விட்டு திரும்பி வரும்பொழுது எழிலகம் அருகே வந்த பொழுது விபத்து ஏறபட்டு பின்னால் அமர்ந்து இருந்த ரூஃபலுக்கு தலையில் பலத்த காயமும், காலிலும் அடிபட்டுள்ளது. இச்சம்பவம் நடந்தது இரவு 01.00 மணி அருகாமையில் என்பதால் சாலையில் சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ் அழைத்து ராஜாஜி அரசு மருத்துவமனையில் அவசரப்பிரிவில் அனுமதித்துள்ளார்கள். பின்னர் அவரிடம் இருந்த ஆதார் அட்டை உதவியுடன் ஊரில் உள்ள அவர் குடும்பத்தாருக்கு விபரம் தெரிவிக்கப்பட்டது.

இரவு நேரப் பயணங்களே விபத்துக்கு காரணமாக அமைந்து விடுகிறது, ஆகையால் இரவு நேரங்களில் அதிக கவனத்துடன் பயணிப்பது நல்லது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..

1 Comment

  1. இந்த தகவலால் நமக்கு கிடைக்கும் படிப்பினை இன்றைய காலக் கட்டத்தில் அனைவரும் ஆதர் கார்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.இது போன்ற இக்கட்டான நேரத்தில் குடும்பத்தாருக்கு உடனடியாக தகவல் கிடைக்க ஏதுவாக இருக்கும்

1 Trackback / Pingback

  1. சென்னை எழிலகம் அருகே இருசக்கர வாகன விபத்து ஒருவர் மரணம் -கீழைநியூஸ் (Keelainews.com)-

Comments are closed.