கீழக்கரை ஏர்வாடியில் மாணவர்கள் புதைமணலில் நடந்து பள்ளிக்கு செல்லும் அவலம்.. நவீன இந்தியாவின் அவல நிலை..

கீழக்கரை ஏர்வாடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 05 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மங்களேஸ்வரி நகரில் இருந்து பள்ளிக்கு படிக்க வரும் மாணவச் செல்வங்கள் முறையான போக்குவரத்தும், சாலை வசதியும் இல்லாமல் மணலில் கால்கள் புதைந்த வண்ணம் நடந்து வரும் வேதனையான காட்சியை தினம் தினம் காணமுடியும். நம் நாட்டின் எதிர்காலத் தூண்கள் இந்த மாணவச் செல்வங்கள், ஆனால் அத்தூண்களுக்கு முறையான அடித்தளத்தை அமைத்துக் கொடுப்பது நம் அரசாங்கத்தின் கடமையாகும்.

ஒரு புறம் நவீன இந்தியா பற்றி பறைசாற்றிக் கொள்ளும் அரசாங்கம் மறுபுறம் அடிப்படை வசதிக்கே வழியில்லாத அடிவேர் மக்கள்.  அனைத்துக்கும் மேலாக இலவச மிதிவண்டியை கொடுத்த மாநில அரசுக்கும், ஊராட்சி நிர்வாகத்துக்கும் மிதிவண்டியில் செல்ல முறையான சாலை தேவை என்ற அடிப்படை புரியாமல் இருப்பது மிகவும் வருந்தக்கூடிய விசயம்.

இது சம்பந்தமாக அவ்வூர் மக்கள் கூறியதாவது இதுபற்றி மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை புகார் மனுக்கள் அளிக்கப்பட்டு விட்டது ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான்.  தற்சயமயம் பள்ளிகள் அனைத்தும் கோடை விடுமுறையில் உள்ளன இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரசாங்கம் முறையான சாலையை அமைத்து பள்ளி செல்லும் மாணவச் செல்வங்களுக்கு நிரந்த நிம்மதியை உண்டாக்கி தருமா??

புனித ரமலான் வாழ்த்துக்கள்..