கீழக்கரையில் ‘மக்கள் மருந்தகம்’ திறப்பு – சகாயம் IAS வழிகாட்டுதலில் விற்பனை துவக்கம்

ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில் தரமான மருந்துகளை கிடைக்க செய்யும் உயரிய நோக்கில் தற்போது தமிழகம் முழுவதும் சகாயம் IAS வழிகாட்டுதலின் படி மக்கள் பாதை இயக்கத்தினரின் ஒத்துழைப்போடு ‘மக்கள் மருந்தகம்’ என்கிற பெயரில் ஜெனரிக் மெடிக்கல் திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கீழக்கரை கிழக்கு தெரு சிட்டி யூனியன் வங்கி அருகாமையில் நேற்று 28.04.17 வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் மக்கள் மருந்தகம் திறப்பு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மக்கள் பாதை இயக்கத்தின் மாநில கள பணி ஒருங்கிணைப்பாளர் உமர் முக்தார் கலந்து கொண்டு மக்கள் மருந்தகத்தை திறந்து வைத்தார்.

கிழக்குத் தெரு ஜமாஅத் துணை தலைவர் ரமீஸ் தலைமை தாங்கினார். கிழக்குத் தெரு ஜமாஅத் துணை பொருளாளர் அஜிஹர் முன்னிலை வகித்தார். கீழக்கரை மக்கள் மருந்தகத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் முஹம்மது சாலிஹ் ஹுசைன், சட்டப் போராளி கல்வியாளர் ஜாபிர் சுலைமான் ஆகியோர் வரவேற்றனர். மக்கள் மருந்தகத்தின் மாநில ஆலோசகர் கண்ணன், இராமநாதபுரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சகோதரர் துரை,

மக்கள் பாதை இயக்கத்தின் இராமநாதபுரம் ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன், டாக்டர். அகமது யாசீன் (ஏர்வாடி மருந்தகம்), டாக்டர் ராஜா (மேலக்கிடாரம் மக்கள் மருந்தகம்), தஞ்சை ஷாஜஹான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  கீழக்கரை மக்கள் மருந்தகத்தின் அட்மின் நதீர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு மக்கள் மருந்தகத்தின் திறப்பு விழா நிகழ்ச்சியை நிகழ்ச்சியை சிறப்பித்தனர். கீழக்கரை நகரில் மக்கள் மருந்தகத்தின் சேவைகள் சிறக்க கீழை நியூஸ் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..