விழித்து கொண்ட ஏர்வாடி ஊராட்சி நிர்வாகம்.. இணைய தள செய்தி எதிரொலி..

பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் வந்து செல்லும் இடமாகும். ஆனால் சுகாதாரத்தை பொறுத்தவரைக்கும் என்றுமே ஓரு கேள்வி குறிதான்.

இது சம்பந்தமாக ஊரில் உள்ள சமூக ஆர்வலர்களும், ஊடகங்களும் சுட்டி காட்டிய வண்ணம்தான் உள்ளனர். இங்கு உள்ள பிரசித்தி பெற்ற ஏர்வாடி தர்ஹா நிர்வாகம் மற்றும் அதில் ஊழியம் செய்பவர்கள் பல லட்சம் ரூபாய் வருடந்தோறும் காணிக்கையாக வருமானம் ஈட்டுகிறார்கள். அதில் ஓரு சிறிய தொகையை செலவழித்தாலே ஏர்வாடியின் சுற்றுப்புறங்களை தூய்மை படுத்தலாம். ஆனால் துரதிர்ஷ்டம் வருமானத்தில் காட்டும் ஆர்வத்தை, சுகாதாரத்தில் காட்டுவதில்லை.

சமீபத்தில் நம் கீழை நியூஸ் இணையத்தில் மற்றும் கீழைநியூஸ் TVயில் அங்குள்ள சுகாதாரக் கேடுகளை சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 28-04-2017 முதல் ஏர்வாடி ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை அப்புறப்படுத்தி சுகாதாரத்தை மேம்படுத்தும் பணிகளை தொடங்கியுள்ளார்கள். இப்பணிகளை ஒருநாளுடன் நிறுத்தி விடாமல் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும் என்பது மக்களின் எதிர்பாப்பாக உள்ளது.

கீழே சமீபத்தில் கீழைநியூஸ் இணையதளத்தில் வெளியிட்ட செய்தி உங்கள் பார்வைக்கு:-

ஆயிரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் வரும் ஏர்வாடியின் அவல நிலை..

புனித ரமலான் வாழ்த்துக்கள்..