கீழக்கரை அருகே நடைபெற்ற அம்மா திட்ட முகாம்

கீழக்கரை தாலுகா திருஉத்திரகோசமங்கை பிர்க்கா மாலங்குடி குருப் மாலங்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கீழக்கரை தாசில்தார் பா இளங்கோவன் தலைமையிலும் சமூக பாதுகாப்புத்திட்ட தாசில்தார் கே எம் தமிம்ராஜா முன்னிலையிலும் நேற்று அம்மா திட்ட முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் 3 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகைகளும், குடும்ப அட்டையில் பெயர்சேர்த்தல் பெயர்நீக்கம் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் வரப்பெற்ற அனைத்து மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு உரிய உத்தரவுகள் 15 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

இம்முகாமில் திருஉத்திரகோசமங்கை வருவாய் ஆய்வாளர் கோகிலா, கிராம நிர்வாக அலுவலரகள் சபிதா, ஊராட்சி செயலர் பாலா் மாலங்குடி கிராம தலைவர் குமாரவேல் உட்பட கிராம முக்கியஸ்தர்களுடன் ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டனர்.