சத்திரக்குடி அருகே கார் விபத்து, கீழக்கரையைச் சார்ந்த பெண்மணி மரணம்..

இன்று காலை சத்திரக்குடி அருகே இரண்டு கார் மற்றும் வேன் மோதிக்கொண்டதில் கீழக்கரை நடுத்தெரு (ம.க குடும்பம்) சார்ந்த அல்லாபிச்சை (சின்ன கபிர் சகோதரர்) என்பவருடைய மனைவி ஆயிஷத்து அலி ஃபாத்திமா(52) பலமாக காயமடைந்து இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்து விட்டார். அல்லாபிச்சையும் மிகவும் ஆபத்தான  நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்குள்ளானவர்கள் வெளிநாட்டில் இருந்து திரும்பி ஊருக்கு காரில் ஊருக்கு வந்து கொண்டிருந்தவர்கள் என்று அறியப்படுகிறது.

மேலும் விபத்துக்குள்ளான மற்றொரு வாகனத்தில் இராமநாதபுரத்தில் பணி புரியும் டாக்டர்.மலைராஜன் பயணம் செய்துள்ளார், அவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இச்சம்பவத்தை சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.