மாயாகுளம் நேருஜி மழலையர் மற்றும் துவக்க பள்ளி ஆண்டு விழா..

கீழக்கரை, மாயாகுளத்தில் உள்ள தேருஜி மழலையர் மற்றும் துவக்கப்பள்ளியின் மூன்றாம் ஆண்டு விழா வியாழன் (20-04-2017) அன்று சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவிற்கு மாயாகுளம் ஜமாஅத் கௌரவத் தலைவர் சேக் முகம்மது தலைமை தாங்கினார். மற்றும் கௌரவத் தலைவர் அப்துல் கரீம் மற்றும் மாயாகுளம் ஜமாஅத் தலைவர் சேகு நெய்னா முகம்மது, கல்விக் குழுத் தலைவர் அப்துல் ஹாலிக், ஜமாஅத் பொருளாளர் சாகுல் ஜமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் தொடர்ச்சியாக மாணர்வர்களுக்கு செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் சுலைமான், உதவித் தொடக்க கல்வி அலுவலர் உஷாரணி, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் தங்கக்கனிமொழி, சமூக பாதுகாப்பு திட்டம் வட்டாட்சியர் தமீம் ராசா மற்றும் கல்விக்குழு ஆலோசகர் மற்றும் பணி நிறைவு பெரும் தலைமை ஆசிரியர் பகருதீன் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகளையும், வாழ்த்துரையும் வழங்கினர்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் நிகழ்வின் இறுதியாக நேருஜி மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி உதவி ஆசிரியை சண்முகதீபா நன்றியுரை வழங்கினார்.