கீழக்கரையில் நீளுகிறது கோடைகால நீர் மற்றும் மோர் பந்தல்.. களத்தில் இறங்கிய நகராட்சி..

சித்திரையில் வெயில் கொளுத்த தொடங்கிவிட்டது. மக்கள் நலன் கருதி பல சமூக மற்றும் அரசியல் அமைப்புகள் நீர்பந்தல் அமைத்து மக்கள் தாகம் தீர்த்து வருகிறார்கள்.

அந்த வரிசையில் இன்று கீழக்கரை நகராட்சி நிர்வாகமும் மக்களின் வெயில் தாகத்தை தீர்க்க நீர் மோர் வழங்கப்பட்டது.

மக்களுக்கு சேவை செய்வதில் ஒருவருக்கொருவர் போட்டி போடுவது ஆரோக்கியமான விசயமே. சிறக்கட்டும் கீழக்கரை நகராட்சியின் சேவை.