Home செய்திகள்தேசிய செய்திகள் விலை குறைவான ‘ஜெனரிக்’ மருந்துகளை மருந்து சீட்டில் எழுத தவறினால் கடும் நடவடிக்கை – இந்திய மருத்துவக் கவுன்சில் மருத்துவர்களுக்கு எச்சரிக்கை

விலை குறைவான ‘ஜெனரிக்’ மருந்துகளை மருந்து சீட்டில் எழுத தவறினால் கடும் நடவடிக்கை – இந்திய மருத்துவக் கவுன்சில் மருத்துவர்களுக்கு எச்சரிக்கை

by keelai

இந்திய மருத்துவ கழகம் MEDICAL COUNCIL OF INDIA விதிமுறைகளின் படி நோயாளிகளுக்கான மருந்து சீட்டில் மருத்துவர்கள் அனைவரும் ‘ஜெனரிக்’ பெயரில் தான் மருந்துகளை எழுத வேண்டும். எந்த ஒரு நிறுவனங்களின் ‘பிராண்ட்’ பெயரிலும் எழுத கூடாது.

ஜெனிரிக் GENERIC பெயர் என்பது நீங்கள் உபயோகிக்கும் மருந்துகளின் உண்மையான மூலப் பொருளின் CHEMICAL வேதியியல் பெயர். உதாரணம் : PARACETAMOL

பிராண்ட் BRAND பெயர் என்பது உங்களுக்கான மருந்துகளை 500 சதவீதத்திற்கும் மேல் கொள்ளை இலாபம் வைத்து விற்கும் நிறுவனங்களுடைய விற்பனை பெயர்கள். உதாரணம் : CALPAL, CROCIN, DOLO, FEBANIL, PACIMOL, PYRIGESIC, METACIN, ZEEMOL,.. என்று PARACETAMOL மட்டுமே தற்போது 800 க்கும் மேற்பட்ட பிராண்ட் பெயர்களில் மெடிக்கல்களில் விற்பனை செய்யப்படுகிறது.

ஆகவே இனி மருத்துவர்கள் மலிவு விலையிலான ஜெனரிக் மருத்துகளையே நோயாளிகளுக்குப் பரிந்துரைக்க வேண்டும், இல்லாவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என, இந்திய மருத்துவக் கவுன்சில் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.  மேலும், மருந்துச் சீட்டில் மருந்தின் பெயர்களைத் தெளிவாக எழுத வேண்டும் எனவும் கூறியுள்ளது.

ஏழை நோயாளிகள் பயன் பெறும் வகையில் அரசு மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் ஜெனரிக் எனப்படும், விலை குறைந்த அதே நேரம், அனைத்து மூலக்கூறு மருந்துகள் அடங்கிய மருந்துகளே விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், மருத்துவர் களில் பெரும்பாலானோர் தனியார் மருந்து நிறுவனங்களுடன் கைகோர்த்துக் கொண்டு, விலை உயர்ந்த மருந்துகளையே பரிந் துரைக்கின்றனர்.

இதனால், ஏழை, நடுத்தர நோயாளிகள் மருந்து, மாத்திரை களுக்காக செலவிடும் தொகை அதிகமாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்ட இந்திய மருத்துவக் கவுன்சில் ஜெனரிக் மருந்துகளைத்தான் மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும் என வலியுறுத்தியது. ஆனாலும், இதனைப் பெரும் பாலான மருத்துவர்கள் பின் பற்றுவதில்லை.

பழையபடி விலை உயர்ந்த பிராண்டட் மருந்துகளை பரிந்துரைப்பதாகவும், மருந்து நிறுவனங்களுடன் சேர்ந்து கொண்டு கொள்ளை லாபம் ஈட்டுவதாகவும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள மாநிலங்களின் மருத்துவக் கவுன்சில் தலைவர்கள், அனைத்து மருத்துவமனைகளின் தலைவர்கள், மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்கள், டீன்கள் உள் ளிட்டோருக்கு இந்திய மருத்துவ கவுன்சில் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2016-ம் ஆண்டு மருத்துவக் கவுன்சி்ல் சுற்றிக்கையின்படி, மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்துள்ள மருத்துவர்கள், அதன் விதிமுறைகளைக் கண்டிப் பாகக் கடைபிடிக்க வேண்டும். நோயாளிகளுக்குப் பிராண்டட் மருந்துகளுக்குப் பதிலாக மலிவு விலையிலான ஜெனரிக் மருந்துகளையே பரி்ந்துரைக்க வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் கடந்த 2015-ம் ஆண்டு ஏராளமான மருந்துகளை அரசு கூடுதலாகச் சேர்த்துள்ளது. அதேபோல், மத்திய அரசின் (ஜன் அவ்ஷதி) JAN AUSHADHI திட்டத்தின்கீழ் மலிவு விலை மருந்து கடைகளின் எண்ணிக்கையும் அதிகப்படுத்தப்பட்டு வருகின்றன.

முக்கிய குறிப்பு :

கீழக்கரை கிழக்குத் தெரு சிட்டி யூனியன் வங்கி அருகாமையில் இந்த மலிவு விலையிலான, தரமான ஜெனரிக் மருந்துகளை, ஏழை எளிய மக்களுக்கு கிடைக்க செய்யும் நல்ல நோக்கத்தில் ‘மக்கள் மருந்தகம்’ என்கிற பெயரில் திரு.உ.சகாயம் IAS அவர்களின் வழிகாட்டுதலின் படி, மத்திய அரசின் அனுமதியுடன் எதிர் வரும் 28.04.17 வெள்ளிக்கிழமை அன்று  திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

TS 7 Lungies

You may also like

1 comment

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!