நீர் நிலைகளை காக்க முன்னுதாரணமாக விளங்கும் மதுரை SBOA பள்ளி மற்றும் பசுமை நடை இயக்கம்..

தமிழக்கத்தில் இந்த வருடம் சரித்திரம் காணாத தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.  எங்கு நோக்கிலும் ஆள்துளைக் கிணறு மூலமாக தண்ணீர் எடுக்கும் தொழில் மிக வேகமாக நடந்து வருகிறது அதன் பின் விளைவு அறியாமல்.  தமிழகத்தில் அனைத்து பகுதிகளில் நீர் மட்ட அளவு சரித்திரம் காணாத அளவு குறைந்து உள்ளது.

நம் நாட்டின் அரசியல்வாதிகளோ எந்த வகையில் எப்படி கொள்ளையடிக்கலாம் என்று வகை வகையாகவும், தினுசு தினுசாகவும் தினம் ஒரு திட்டம் தீட்டி வருகிறார்கள்.  இன்னொரு பக்கம் தமிழகத்தில் முறையான அரசாங்கம் செயல்படுகிறதா இல்லையா என்ற கேள்விக் குறி.  ஆனால் எந்த சத்தமும் இல்லாமல் மதுரையில் உள்ள SBOA ( State Bank Officers Association School) பள்ளிக் கூடமும், பசுமை நடை இயக்கமும் இணைந்து மதுரை அருகில் உள்ள வடிவேல்கரை ஊராட்சிக்கு உட்டபட்ட மைலனேந்தல் கண்மாயை தத்தெடுத்து அதை சுத்தம் செய்து, செடிகளையும் நட்டி நீர்வளத்தை பெருக்குவதற்கான காரியத்தில் இறங்கியுள்ளார்கள்.

பசுமை நடை இயக்கம் கடந்த பல வருடங்களாக மதுரை மற்றும் அதன் சுற்றியுள்ள வரலாறு சார்ந்த பகுதிகளை அடையாளம் கண்டு அதன் பழமைத் தன்மையை பாதுகாக்கவும், மக்கள் மத்தியில் அதன் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். பசுமை நடை இயக்கத்தின் முக்கிய நிர்வாகியான அ.முத்துக்கிருஷ்னண் ஒரு சிறந்த சமூக சேவகர் மற்றும் அழிந்து வரும் வரலாற்று சின்னங்களை பாதுகாக்க பாடுபட்டு வரும் வரலாற்று ஆசிரியரும் ஆவார்.  இந்த வருடம் அவருடைய சமூக சேவைக்காக பெரியார் மற்றும் அம்பேத்கர் விருது பெற்றது குறிப்பிடதக்கதாகும்.

அதே போல் SBOA  பள்ளி தரமான கல்வி வழங்குவதுடன் சிறந்த மாணவர்களை இந்த சமுதாயத்துக்கு கடந்த பல வருடங்களாக வழங்கி வருகிறது.  அதே சமயம் இந்தப் பள்ளி பல சமுதாய பணிகளில் ஈடுபடுவதுடன் மாணவர்களையும் சமுதாயப் பணிகளில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தை வளர்த்து வருவது குறிப்பிடதக்கது.

இன்று (23/04/2017) முத்தாய்ப்பாக பசுமை நடை இயக்கமும் SBOA (Statate Bank Officers Association School) பள்ளியும் இணைந்து மைலனேந்தல் கண்மாயை தத்தெடுத்து அதை தூய்மைப்படுத்தும் செயலில் இறங்கி அதற்கான ஆரம்ப கட்ட நிகழ்ச்சியும் இன்று அனைத்து நிர்வாகிகளின் தலைமையில் உறுதிமொழியுடன் தொடங்கியது.

இதுபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் அரசை மட்டும் நம்பி இருக்காமல் ஊர்களில் அமைந்து இருக்கும் தன்னார்வ அமைப்புகளுடன் கைகோர்த்து ஊரின் நீர் நிலைகளை சீர் செய்யும் பொருட்டு வருங்காலத்தில் வளமான நீர் நிலைகளை தமிழகத்தில் பெற முடியும் அதே போல் அழிந்து வரும் நீர் நிலைகளையும் அழிவில் இருந்து காப்பாற்ற முடியும்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..