கீழக்கரையில் மீன் விலை கிடு கிடு உயர்வு..

கீழக்கரை மற்றும் கடல் சார்ந்த பகுதிகளில் மீன் பிடி தொழில் ஓரு முக்கியமான தொழிலாகும்.  அத்தொழில் மூலம் கிடைக்கும் வாழ்வாதாரத்தை நம்பி பல நூற்று கணக்கான குடும்பங்கள் இப்பகுதியில் வாழ்ந்து வருகின்றார்கள்.

இந்நிலையில் கடந்த 15ம் தேதி முதல் அரசாங்கம் மீன் கடலில் உற்பத்தி காலத்தை முன்னிட்டு மீன் தடை வருடாந்தோரும் விதிப்பது போல் இந்த வருடமும் விதித்துள்ளது.  ஆகையால் சந்தைக்கு விற்பனைக்கு வரும் மீன் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.  இதனால் கீழக்கரையில் மீன் விலை நாளுக்கு நாள் வெகுவாக ஏறி வருகிறது. இதனால் மீன் பிரியர்களும், மீன் வியாபாரிகளும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும் அரசாங்கமும் இதுபோன்ற மீன் பிடி தடை காலங்களில் மீன் தொழிலையே நம்பி இருக்கும் மீன் பிடி தொழிலாளர்களுக்கு அவர்களுடைய தடை கால வருமானத்திற்கு முறையான மாற்று வழி உண்டாக்குவது நிரந்தர நிம்மதியை தரும்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..