அனல்காற்று பற்றிய பீதி வேண்டாம்..

தமிழகத்தில் கடந்த இரண்டு தினங்களாக வரும் இரண்டு நாட்களுக்கு  கடுமையான அனல் காற்று வீசும், ஆகையால் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்ற அச்சத்தை ஊட்டும் செய்தி இணையதளம் மற்றும் சமூக வலைதளம் மூலமாக வேகமாக பரவி வருகிறது.

இதன் வீரியத்தையும் உண்மைத் தன்மை பற்றி அறிந்து கொள்ள கீழை நீயூஸ் சார்பாக Tamilnadu Disaster Management Agency (TNSDMA) அதிகாரிகளை அவர்களுடைய அதிகாரபூர்வமான தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோம். அவர்கள் கூறியதாவது, சமூக வலைதளங்களில் குறிப்பிடுவது போல் அச்சப்பட தேவையில்லை, மேலும் 48 டிகிரி வரை வெப்பம் நாள் முழுவது இருக்கும் என்பதெல்லாம் தேவையில்லாத அச்சம். ஆனால் அனேக வெயில் காலங்களில் இருப்பது போல் அனல் காற்று வீசுவது தற்காலிகமாக இருக்கும். ஆகையால் பொதுமக்கள் சாதராணமாக வெயில் காலங்களில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று தெரிவித்தார்.

மேலும் இன்றைய மற்றும் நாளைய வெப்பநிலை 37 முதல் 40 வரைதான் அதிகபட்சம் இருக்கும், ஆனால் வெப்பத்தின் உணர்வு நமக்கு 40 டிகிரியை தாண்டுவது போல் இருக்கும்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..