Home கட்டுரைகள்விழிப்புணர்வு கட்டுரைகள் வலியில்லாமல் இரத்தத்தை உறிஞ்சும் மூட்டைப் பூச்சிகள்.. அறியாத தகவல்கள்…

வலியில்லாமல் இரத்தத்தை உறிஞ்சும் மூட்டைப் பூச்சிகள்.. அறியாத தகவல்கள்…

by ஆசிரியர்

மூட்டைப்பூச்சி, நமது வீடுகளின் அழையா விருந்தாளிகளாக எப்போதும் தங்கியிருக்கும். முக்கியமாக வளைகுடா நாடுகளில் துபாய் போன்ற ஊரில் வசித்தவர்கள் இதன் கடியில் இருந்து தப்பித்து இருக்கவே முடியாது. நாம் பல மாதம் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுவந்தாலும், நமக்காக பசி தாங்கி காத்துக் கொண்டிருக்கும். மூட்டைப்பூச்சி பற்றிய சில அறிய தகவல்கள்.

மூட்டைப்பூச்சிகள் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டது. இல்லாத இடமேயில்லை எனும் அளவுக்குஎல்லா இடங்களிலும் வசிக்கும் திறன் பெற்றவைமூட்டைப்பூச்சிகள். ஓட்டல்கள், வீடுகள், மருத்துவமனைகள், கல்லூரிகள், அலுவலகங்கள், பள்ளிகள், வாகனங்கள், தியேட்டர்கள் என மனிதர்கள் வசிக்கும் எங்கும் மூட்டைப் பூச்சிகளும் வாழ்கின்றன.

பெரும்பாலும் இருக்கைகள், மெத்தை படுக்கையைச் சுற்றிஎந்த இண்டு, இடுக்கிலும் அவற்றால் வசிக்க முடியும். எனவேஇதை ஆங்கிலத்தில் ‘பெட் பக்ஸ்’ என்றே அழைக்கிறார்கள். இதன்அறிவியல் பெயர் ‘சிமெக்ஸ் லெக்சூலரியஸ்’.

கிராமப்புறங்களின் தூய்மை குறைந்த வீடுகளில் நிறைய மூட்டைப் பூச்சிகள் இருக்கும் என்ற நம்பிக்கை பரவலாக இருக்கிறது. ஆனால் கிராமங்களைவிட நகரங்களில் அதிக மடங்கு அதிகமாக மூட்டைப்பூச்சி தொல்லை நிலவுகிறதாம். காரணம் முறையாகப் பேணப்படாத அழுக்கு துணிகளும் மூடைகளும்.

மூட்டைப்பூச்சிகள் கடிப்பதால் நோய் பரவுவதில்லை. இதுவரை மூட்டைக்கடி வியாதிகள் எதுவும் அறியப்படவில்லை. ஆனால் அவை கடிக்கும்போது லேசான அரிப்பு ஏற்படும். சிலருக்கு சருமத்தில் சிவப்பு புள்ளிகள் உருவாகும்.

மெத்தை ஓரங்கள், மெத்தை விரிப்புகள் மற்றும்போர்வைகளின் ஓரங்களில் ரத்தத்துளிகள் அல்லது மூட்டைப் பூச்சிகளின் எச்சங்கள் இருக்கிறதா? என்று பாருங்கள். இது மூட்டையை கண்டுபிடிக்கும் வழியாகும். நம்மால் எளிதில் மூட்டைப் பூச்சிகளை கண்டுபிடிக்க முடியாது. எனவே மூட்டைப்பூச்சி ஒழிப்பு பணியில் ஈடுபடுபவர்கள் துணையுடன் அவற்றை கட்டுப்படுத்தலாம்.

நாம் பயணத்தில் இருந்து திரும்பும் போது மூட்டைப்பூச்சிகள் நம்முடைய வீடுகளுக்கு விருந்தாளிகளாய் அழைத்து வரப்படலாம். எனவே பயணங்களின் போது பயன்படுத்திய உடைகளை வீட்டிற்கு வந்ததும், உடனே வென்னீரில் அமிழ்த்து துவைத்து பயன்படுத்துவதன் மூலம் வீடுகளில் மூட்டைப் பூச்சிகள் நுழைவதை தவிர்க்கலாம்.

மூட்டைப் பூச்சிகளால் ஒரு ஆண்டு முழுவதும் கூட உணவின்றி உயிர் வாழ முடியும். எனவே இருக்கை, படுக்கை,பை, டிரங்குப்பெட்டி போன்ற பொருட்கள் நமது பயன்பாட்டில் இருந்து நீண்ட காலம் விலகி இருந்தாலும், அதில் தங்கியிருக்கும் மூட்டைப்பூச்சிகள் உயிருடன் இருந்து மீண்டும் நம்முடன் ஒட்டிக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. அவை 0 டிகிரி குளிர் நிலவினாலும், 122 டிகிரிவெப்பநிலை நிலவினாலும் மூட்டைப் பூச்சிகளால் உயிர்வாழ முடியும். இந்த மூட்டைப் பூச்சிகள் இரவில் நாம் வெளியிடும் கார்பன்–டை–ஆக்சைடு வாயுவால் ஈர்க்கப்பட்டு ரத்தம் குடிப்பதற்காக வெளியே வருகிறது.

மூட்டைப் பூச்சிகள் சிறந்த மயக்க மருத்துவர் போலத்தான்செயல்படும். உடலுக்குள் தனது உமிழ்நீரான ‘சாலிவா’ திரவத்தை செலுத்துவதன் மூலம் சில நொடிகளுக்கு அந்தப் பகுதியை மரத்துப்போகச் செய்கிறது. இதனால் வலியின்றி ரத்தம் உறிஞ்சப்படுவதால் உறக்கத்தின் போது பலரால் மூட்டைக் கடியை உணர முடிவதில்லை. ஆனால் தவறுதலாக மூட்டைப் மூச்சியை நசுக்கி விட்டால் மிக மோசமான துர்நாற்றம் ஏற்படும்.

ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான முட்டைகளிட்டு குஞ்சு பொரிக்கக் கூடியது மூட்டைப்பூச்சி. கர்ப்ப காலத்தில் தினமும் 5 முதல் 10 முட்டைகள் இடும். ஒரு பெண்மூட்டைப்பூச்சி, தன் 6 மாத ஆயுள் காலத்தில் சுமார் 400 குஞ்சுகள் பொரிக்கும். மூட்டைப்பூச்சி தானே என்று சாதாரணமாக இருந்து விடாமல் கவனமாக இருப்பது நல்லது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!