மக்கள் தேவையை உணர்ந்து கீழக்கரை நகராட்சி நிர்வாகம் உதவி..

கீழக்கரையில் வீடுகளில் சேரும் குப்பைகளை கீழக்கரை வெல்பர் அசோசியேசன் வீடுகளில் வந்து குப்பைகளை வாங்கி, அவர்களால் கையாளப்படும் டிராக்ட்டர் வண்டிகளில் சேகரித்து தோனிப்பாலம் சென்று குப்பைகளை கொட்டி வருவது வழக்கம்.

ஆனால் கடந்த சில தினங்களாக குப்பைகளை அள்ளி வந்த டிராக்டர் பழுதடைந்த காரணத்தால் கீழக்கரையில் உள்ள பல தெருக்களில் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள். பொதுமக்கள் குப்பைகளை ஆங்காங்கே ரோட்டிலும், தெருவிலும் வீச ஆரம்பித்ததால் பொது இடங்களில் குப்பை மேடாகும் சூழல் உருவானது.

இது குறித்து வெல்பர் அசோசியேசன் சாதிக் அவர்கள், நகராட்சி நிர்வாகம் வாகனம் தந்து உதவினால் அசோசியேசன் ஆட்கள் மூலமாக அனைத்து பகுதிகளிலும் எப்போழுதும் போல் குப்பைகளை அகற்றிவிடலாம் என்ற கோரிக்கையை வைத்தார். இதுகுறித்து கீழக்கரை நகராட்சி ஆனையாளர் சந்திரசேகர் உதவியை நாடிய பொழுது நகராட்சி டிராக்டரை டிராக்ட்ரை வைத்து பழுதான வாகனம் வரும் வரை உடனடியாக உபயோகம் செய்து கொள்ளட்டும் என்றார்.

நகராட்சி ஆணையரின் துரிதமான உதவிக்கு பொதுமக்கள் சார்பாகவும், மக்கள் டீம் சார்பாகவும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..