கடலாடி டாஸ்மாக் கடைக்கு பூட்டுப்போட்டு பொதுமக்கள் தொடர் போராட்டம்..

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் புதிய டாஸ்மாக் கடையை ஐந்தாவது நாளாக இன்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு கடைக்கு பூட்டு போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் மீண்டும் பரபரப்பு ஏற்ப்பட்டது

சமீபத்தில் உச்சநீதிமன்றம் நெடுஞ்சாலைகளின் அருகே உள்ள மதுபானக்கடைகளை அகற்ற உத்தரவிட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் வேறு வழியின்றி குடியிருப்பு பகுதிகளில் டாஸ்மாக் கடையை அமைக்க மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் முன்வந்துள்ளது இதற்கு பல்வேறு இடங்களில் அப்பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக கடலாடி பேருந்து நிலையம் அருகே இயங்கி வந்த மதுபானக்கடையை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு கலைக்கல்லூரி மற்றும் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் திறப்பதற்கு கிடாக்குளம் கடையாக்குளம் தேரங்குளம் நரசிங்ககூட்டம் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் காலை முதல் இரவு வரை கடை முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்று கடைக்கு பூட்டுப்போட்டும், தாலிக்கு தங்கம் வழங்கும் தமிழக அரசே எங்களின் தாலியை பறிப்பது ஏன் ..? என்று கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் கடைமுன்பு அடுப்பு வைத்து கஞ்சி காய்ச்சி சாப்பிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்*

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..