ஆயிரக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் வரும் ஏர்வாடியின் அவல நிலை..

கீழக்கரை, ஏர்வாடி உள்ளூர் ஆட்களை விட தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் ஊர் என்றே கூறலாம்.  ஆனால் அவ்வூரின் சுற்றுப்புற சுகாதார சீர் கேடு நகராட்சி நிர்வாகம் இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது.

ஏர்வாடி நகருக்குள் தினமும் ஆயிரகணக்கான மக்கள் அந்த ஊரில் உள்ள பிரசித்திப்பெற்ற தலங்களைக் காண வந்த வண்ணம் இருப்பார்கள்.  அவர்களின் வருகையினால் பல வியாபாரங்களும், தொழில்களும் உயிர்ப்புடன் இருக்கிறது என்றால் மிகயாகாது.

ஆனால் முக்கிய தலங்களின் நுழைவுப் பகுதியிலும், ஊரில் உள்ள பல பகுதிகளில் கழிவுகளும், குப்பைகளும் தெருவோரங்களில் கொட்டப்பட்டு தொற்று நோய்கள் பரவக்கூடிய அபாயகரமான சூழ்நிலையில் இருக்கிறது. நகராட்சி நிர்வாகம் கண் திறக்குமா?? ஏர்வாடி சுகாதாரமான நகரமாக மாறுமா??

 

To Download Keelainews Android Application – Click on the Image

August Issue…

August Issue…

1 Trackback / Pingback

  1. விழித்து கொண்ட ஏர்வாடி நகராட்சி நிர்வாகம்.. இணைய தள செய்தி எதிரொலி.. -கீழைநியூஸ் (Keelainews.com)-

Comments are closed.