சாலைத் தெரு சாக்கடை வழியும் தெருவாக மாறி வரும் அவலம்..

கீழக்கரை சாலைத் தெரு பெருமை வாய்ந்த ஓடக்கரை பள்ளி அமைந்து உள்ள பகுதியாகும். மேலும் இச்சாலை எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் நிறைந்த சாலையாகும்.

ஆனால் இத்தெருவில் தொழுகைப் பள்ளி வழியாக பெருக்கெடுத்து ஓடும் சாக்கடை நீர் தீராத ஒரு பிரச்சினையாக இருக்கிறது. இது சம்பந்தமாக மீண்டும் மக்கள் பொதுத்தளம், SDPI கட்சி மற்றும் பல சமூக அமைப்பினர் நகராட்சி நிர்வாகத்திடம் நிரந்தரமாக தீர்வு காணும்படி வேண்டுகோள் வைத்துள்ளனர்.

கீழக்கரை நகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால்தான் தீர்வு காண முடியும் என்ற வாதத்தை முன் வைத்தாலும், ஒத்துழைப்பு தராதவர்களை சட்டத்தின் கீழ் கொண்டு வந்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பது நகராட்சியின் கடமை என்பதை மறந்து விடக்கூடாது.

இந்தப் பிரச்சனை சம்பந்தமாக இரண்டு மாதங்களுக்கு முன்பு கீழை நியூஸ் டிவியில் சிறப்பு பார்வையாக வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..