வாகனங்களுக்கும் தேவை முறையான சோதனை.. இல்லையென்றால் வேதனை…

நாம் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை பேண நீர், இரத்தம் போன்றவைகளை பரிசோத்து பார்த்து  உடலின் நிலைமையை அறிவது போல் மோட்டார் வாகனங்கள் சீராக செயல் பட அவ்வப்போது நாம் பரிசோதனை செய்வது அவசியமாகும்.

பொதுவாக வளைகுடா நாடுகளில் எப்போதுமே வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். அதுவும் கோடை காலத்தில் சொல்லவே வேண்டியதில்லை குறைந்த பட்சம் 50 செல்சியஸ் டிகிரி வரை பதிவாகும்.

ஆகையால் இந்த கால கட்டங்களில் வாகன ஓட்டிகள் தங்கள் மோட்டார் வாகனங்களை முழுமையாக பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் நீண்ட தூர பயணித்தின் போது வாகனம் பழுதாவதை தவிர்த்து கொள்ள முடியும்.

(என்ஜினின் வெப்ப நிலையை சுட்டிகாட்டும் மீட்டர்)

மோட்டார் வாகனத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி வாகன சோதனை வல்லுநர்கள் தரும் சில முக்கிய குறிப்புகள் உங்கள் பார்வைக்கு:-

  1. என்ஜினை குளுமையாக வைத்து கொள்ள உதவும் ரேடியேட்டரின் கூலண்ட் (குளிர்படுத்தும்) நீரின் அளவை பராமரிக்க வேண்டும்.
  2. டயரின் காற்றழுத்தத்திற்கு ஏற்ப காற்று  அல்லது நைட்ரோஜன் வாயு நிரப்புவதன் மூலம் குழுமையாக வைத்து கொள்ள முடியும்.
  3. டயரில் விரிசல் ஏற்பட்டிருந்தால் உடனடியாக மாற்று டயரை பொருத்துவதனால் வெப்ப மிகுதியால் டயர் வெடிப்பதை தவிர்க்க முடியும்.
  4. என்ஜினின் வெப்ப நிலை மீட்டர் அதிக பட்சம் 50% மேல் உயர்ந்து விடாமல் கண்கானிப்பபது மிகவும் அவசியம், அவ்வாறு செய்ய தவறும் பட்சத்தில் இன்ஜினின் வெப்ப தன்மை அதிகரித்து வாகனம் பழுதடைய வாய்ப்பிருக்கிறது.
  5. அதிக வெப்பத்தின் காரணமாகிறது என்ஜின் ஆயிலின் ஆற்றல் தன்மை எளிதில் குறைந்து விட வாய்ப்புள்ளதால் மாதம் ஒரு முறை ஆயிலின் தன்மையை சோதித்து புதிய எண்ணெய் மாற்றிக் கொள்வது அவசியம்.
  6. டேஸ்போர்டில் உள்ள எச்சரிக்கை அடையாளங்களை (Warning Sign) அடிக்கடி கண்காணித்து கொள்வது அவசியம்.
(டேஷ் போர்டில் தோன்றும் எச்சரிக்கை அடையாளங்கள்-Warning Signs)

மோட்டார் வாகனத்தை முறையாக பராமரித்தால் மட்டுமே நம்முடைய வாகன பயணம் தடங்கல் இல்லாத பயணமாகவும், நேரத்தையும் சேமிக்க கூடிய பயணமாகவும் இருக்கும்.  ஆகையால் நம் உடலை பேணுவது போல் வாகனத்தையும் அவ்வப்போது பரி சோத்தித்து சரி செய்து கொள்வது அவசியம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

To Download Keelainews Android Application – Click on the Image