கரும்புச்சாறு பொங்கல்

கரும்புச்சாறுப் பொங்கல்

தேவையானவை :

🔸பச்சரிசி – ஒரு கப்
🔸பாசிப் பருப்பு – அரை கப்
🔸கரும்புச் சாறு – 2 கப்
🔸நெய் – சிறிதளவு
🔸நறுக்கிய பேரீச்சை – கால் கப்
🔸முந்திரி – 25 கிராம்
🔸ஏலக்காய்த்தூள் – சிறிது

செய்முறை :

வெறும் வாணலியில் பாசிப்பருப்பை வாசனை வரும் வரை வறுத்து , பச்சரிசியோடு சேர்த்துக் கழுவவும் . பிறகு குக்கரில் இட்டு இரண்டு கப் கரும்புச்சாறு, இரண்டு கப் தண்ணீர் ஊற்றி , அடுப்பை சிம்மில் வைத்து மூன்று விசில்கள் வரும் வரை வேக வைத்து இறக்கவும் . குக்கரில் பிரஷர் போனதும் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடாக்கி , நறுக்கிய பேரிச்சை , முந்திரி , எலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து வறுத்து பொங்கலில் இட்டு கிளறிப் பரிமாறுங்கள் . கரும்புச்சாறே தேவையன இனிப்பைத் தருவதால் சர்க்கரை தேவையில்லை .  தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம் .

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*