Home கட்டுரைகள்விழிப்புணர்வு கட்டுரைகள் கிழக்கு ஆசியா நாடுகளில் விரும்பி சாப்பிடப்படும் இராமநாதபுரம் மாவட்ட தென்னக கடல் பகுதியில் பிடிக்கப்பட்டு ஏற்றுமதி ஆகும் சிங்கி இறால்…

கிழக்கு ஆசியா நாடுகளில் விரும்பி சாப்பிடப்படும் இராமநாதபுரம் மாவட்ட தென்னக கடல் பகுதியில் பிடிக்கப்பட்டு ஏற்றுமதி ஆகும் சிங்கி இறால்…

by ஆசிரியர்

இராமநாதபுரம் தெற்கு கடல் பகுதி மீன் பிடி தொழிலில் பிரசித்தி பெற்றதாகும்.இந்த பகுதிகளில் பிடிக்க படும் மீன்கள், இறால், கணவாய் மற்றும் கடல் உணவுகள் இப்பகுதி மக்களின் தேவைக்கு போக வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

இம் மாவட்ட கடலோர பகுதியில் பிடிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும் கடல் உணவுகளில் சிங்கிஇறால் முதல் வரிசையில் இருக்கின்றது. சிங்கிஇறால் கிழங்கு ஆசிய நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, பேங்காங் மற்றும் ஹாங்காங் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

பல வருடங்களாக கடல் உணவுகளை நேர்த்தியான முறையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் கீழக்கரை பழைய குத்பா பள்ளி தெருவை சேர்ந்த ஹாஜா அலாவுதீன் அவர்கள் கூறியதாவது, சிங்கிஇறாலில் பல வகை உள்ளது.சிங்கி இறால்கள் அதிக பச்சமாக 500 கிராம் முதல் 700 கிராம் வரை எடையுள்ளதாக இருக்கும். இதில் முக்கியமானது மணி சிங்கிஇறால், தாழஞ் சிங்கிஇறால், ராஜாளி சிங்கிஇறால் மற்றும் தே சிங்கிஇறால் முக்கியமானது ஆகும். சீசனை பொருத்து விலைகள் இருக்கும். இந்த சிங்கி இறால்களில் மணி சிங்கி இறால் அதிக விலையுள்ளதாகும். சிங்கிஇறால் மிகவும் சுவை நிறைந்ததாகவும், மருத்துவ குணம் நிறைந்ததாகவும் இருக்கின்றது. விலை அதிகமாக இருந்தாலும் இதை பிடிப்பது கடினம் நிறைந்தது ஆகும். நம் கடல் பகுதியில் பிடிக்கப்படும் சிங்கி இறால்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது என்றார்.

இத்தொழிலில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் ஏர்வாடி அருகில் இருக்கும் ஏராந்தரவையை சேர்ந்த முத்து நாதன் அவர்கள் கூறியதாவது, நாங்கள் பல வருடங்களாக பரம்பரையாக கடல் தொழில் செய்து வருகின்றோம். சிங்கி இறால்களை பிடித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு உயிருடன் விற்பனை செய்து வருகின்றோம். இப்பகுதியில் எங்களைப் போன்ற பல மீன்பிடி வியாபாரிகள் இருக்கின்றோம். 300 கிராமுக்கு அதிகமாக எடையுள்ள சிங்கி இறால்களை வியாபாரிகள் வாங்கி சென்று விடுவார்கள். அதற்கு குறைவாக உள்ள சிங்கி இறால்களை மீன் பிடி தொழிலாளர்கள் இடம் கிலோ கணக்கில் வாங்குவோம். ஒரு கிலோவிற்கு 15 முதல் 20 வரை 50 கிராமில் சிங்கி இறால்கள் இருக்கும். ஒரு கிலோ சிறிய ரக சிங்கி இறால் 700 ரூபாய் முதல் 900 வரை இருக்கும். இதை வளர்த்து வியாபாரிகளிடம் விற்பது சவால் நிறைந்தது ஆகும்.

மேலும் அவர் இதை கடலில் பாதுகாத்து உணவு வழங்குவதை சுகரசியமாக விவரித்தார். இந்த சிறிய ரக சிங்கி இறால்களை கடலில் இருபதுக்கு இருபது அளவு உள்ள குடையில் கரையில் இருந்து கழுத்து அளவுள்ள கடலில் உள்பகுதியில் வைத்து விடுவோம். இதற்கு சிப்பிகளை உணவாக கொடுத்து வருவோம். காலை 6 மணி முதல் 10 மணி வரை கடற்கரை ஓரங்களில் மண்ணில் புதைந்து இருக்கும் சிப்பிகளை எடுப்போம். சிப்பிகள் எங்கு இருக்கும் என்பதை அறிய கடற்கரை ஓரங்களில் கூர்ந்து கவனித்து வந்தால் மணலில் சிறிய துவாரங்கள் காணப்படும். இதில் தோண்டி பார்த்தால் சிப்பிகள் இருக்கும். இதை சேகரித்து கடலில் கூடையில் இருக்கும் சிங்கி இறால்களுக்கு கடல்நீரை தெளிவாக காட்டும் கண்கண்ணாடியை அணிந்து கொண்டு குடையில் போட்டு விடுவோம்.

மேலும் இந்த சிப்பிகளை நாம் முழுநிலகடலையை உடைத்து சாப்பிடுவது போல் சிங்கி இறால்கள் சாப்பிடுவது பார்ப்பதற்கு ஆர்வமாக இருக்கும். இப்படி மூன்று முதல் நான்கு மாதங்கள் வளர்ப்போம்.நான்கு மாதங்களில் வளர்ந்து சுமார் அரை கிலோ எடை வரை வளரும். நல்ல எடை வளர்ந்த உடன் உயிருடன் வியாபாரிகளிடம் நல்ல பருவத்தில் விற்று விடுவோம். என்னுடன் இந்த வருடம் 12 ம் நிலை படிக்கும் பாண்டி என்ற உறவுக்கார மாணவரும் உறுதுயாக இருக்கின்றார். நாட்டிற்கு அன்னிய செலவானியை அதிக அளவில் ஈட்டித்தரும் இந்த தொழில் புரியும் கடல் தொழிலாளர்களுக்கு அரசு மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கி மீன் பிடி தொழிலாளர்களின் வாழ்வாதரத்தை உயர்த்த வேண்டும் என்றார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!