முன்னாள் ஆட்சியரால் உருவாக்கப்பட்ட பூங்கா நடைப்பயிற்சி மேடை, கவனிப்பாரற்று கிடக்கும் அவலம்..

இராமநாதபுரத்தில் மிகவும் பரபரப்பாக இயங்கி வரும் நகர் பாரதி நகர். இப்பகுதியில் அரசு அலுவலர்கள், வணிகர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் வசித்து வருகிறார்கள். இப்பகுதி மக்களுக்காக முன்னாள் மாவட்ட ஆட்சியர் நந்தகுமார் IAS எடுத்த சிறப்பான முயற்சியால், பாரதிநகர் சுற்றியுள்ள மக்களின் பயன்பாட்டுக்காக அழகிய பூங்கா நடைபாதையை D பிளாக் அருகே மக்கள் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டது.

ஆனால் மக்கள் தேவைக்காக உருவாக்கி தந்த பூங்கா நடை பயிற்சி மேடை போதிய பராமரிப்பு இல்லாத காரணமாக நாளுக்கு நாள் சேதமடைந்து வருகிறது. இந்த இடத்தில் ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை சுத்தம் செய்யாமல் குப்பைகள் தேங்கி வருகிறது, கூடிய விரைவில் குப்பை கிடங்காக மாறும் அபாயம் உருவாகி வருகிறது.

நகராட்சி நிர்வாகம் போதிய துப்புரவு பணியாளர்களை நியமனம் செய்து பராமரிப்பு செய்து மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்றதாக ஆக்குமா ?

To Download Keelainews Android Application – Click on the Image