வாலிபால் போட்டிகளில் தொடர்ந்து முத்திரை பதிக்கும் கீழக்கரை இளைஞர்கள்..

08-04-2017 (சனிக்கிழமை) அன்று பிரப்பன்வலசை அலிநகர், சற்குண சன்மார்க்க சங்கம் – SSS கிளப் சார்பில் 10ம் ஆண்டு மின்னொளி கைப்பந்துபோட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சுற்றுவட்டாரத்தில்இருந்து பல அணிகள் கலந்து கொண்டு போட்டியிட்டன. இறுதிப் போட்டியில் கீழ்க்கரை அணி முதல் பரிசை தட்டிச்சென்றது.  இந்த வாரத்தில் கீழக்கரை இளைஞர்கள் பெரும் இரண்டாவது வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் முதல் பரிசாக 15001, இரண்டாம் பரிசாக 8001, மூன்றாம் பரிசாக 5001, மற்றும் நான்காம் பரிசாக 3001 ரூபாய் மற்றும் ஆட்ட நாயகன், தொடர் ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

நடைபெற்ற போட்டியில் கீழக்கரை அணி, ஒப்பிலான் ப்ளேபாய்ஸ் அணி, கிளியூர் அணி மற்றும் பிரப்பன்வலசை கமிட்டி அணி என முதல் நான்கு பரிசுகளை முறையே வென்றனர்.

தொடர் வெற்றிகளைப் பெற்று வரும் கீழ்க்கரை இளைஞர்களுக்கு கீழை நியூஸ் நிர்வாகம் மனமார்ந்த வாழத்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.