உடல் உறுப்பு தானத்தை தனி மனிதனாக வலியுறுத்தும் சமூக சேவகர்.

தானத்தில் சிறந்த தானம், தான் மறைந்த பின்பும் தன் செயல்பாடுகளால் மற்றவர்களின் உயிர்களை வாழ வைக்கும் தானமாகும். அவ்வகையில் இன்று பல சமூக இயக்கங்களும், தன்னார்வலர்களும் இரத்த தானம் மற்றும் உடல் உறுப்பு தானங்களைப் பற்றி பல வகையான விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவது நாம் அனைவரும் அறிந்த விசயமாகும்.

இதெற்கெல்லாம் மகுடம் வைத்தார் போல் திருப்பூரை சேர்ந்த சமூகசேவகர் சிவசுப்பிரமணி, கடந்த 11 ஆண்டுகளாக இரத்ததானம், உறுப்பு தானம், உடல் தானம் போன்றவற்றை வலியுறுத்தி தனிமனிதராக பல வகையில், பல இடங்களில், பல கட்டமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். தற்சமயம் அவர் நடத்தி வரும் நேசம் காப்போம் அறக்கட்டளை மூலம் தென் மாவட்டங்களில் தனது பிரச்சாரத்தை துவக்கியுள்ளார். அதன் தொடர்ச்சியாக சிவசுப்பிரமணி தற்சமயம் ராமநாதபுரத்தில் தன்னுடைய விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.

அவருடைய சேவை மேலும் சிறக்க கீழை நியூஸ் நிர்வாகம் மனமார வாழ்த்துகிறது.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image