இராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.

இராமநாதபுரம் மாவட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில்  07.04.2017 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் நடராஜன் நேரடியாக வருகை தந்து ஆய்வு ஆய்வு மேற்கொண்டார்.

​வட்டாட்சியர் அலுவலகத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை சான்றுகளான சாதிச்சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள், உள்பட சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் பல்வேறு உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் என பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இன்றைய தினம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பல்வேறு பதிவேடுகளை ஆய்வு செய்ததோடு, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களை உரிய முறையில் ஆய்வு செய்து தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

​அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் வறட்சியை போக்கிடும் பொருட்டு, இராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செய்யதம்மாள் அறக்கட்டளையின் சார்பாக மரக்கன்றுகள் நடும் பணியினைத் துவக்கி வைத்தார். நடப்பாண்டில் 5000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. அதனடிப்படையில் இராமநாதபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இன்றைய தினம் 100 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

​இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் வட்டாட்சியர் சுகுமாறன் உள்பட அரசு அலுவலர்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் உடனிருந்தனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.