
வஞ்சிர மீன் குழம்பு !
தேவையானவை :
🔸வஞ்சிரம் மீன் துண்டுகள் (எலும்போடு ) – 8
🔸புளிக்கரைசல் – தேவையான அளவு
🔸பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1
🔸பொடியாக நறுக்கிய தக்காளி
– 2 (விருப்பட்டால்)
🔸பூண்டு பல் – 8
🔸மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன் தாளிக்க
🔸கடுகு , உளுந்து , சீரகம் , வெந்தயபொடி – சிறிதளவு
🔸உப்பு தேவையன அளவு
🔸கறிவேப்பிலை – சிறிதளவு
பேஸ்ட் 1 :
🔸மல்லி (தனியா) – 2 டேபிள் ஸ்பூன்
🔸வெந்தயம் – 2 டேபிள்ஸ்பூன்
🔸மிளகு – 2 டீஸ்பூன்
🔸காய்ந்த மிளகாய் – 4
🔸எண்ணெய – தேவையான அளவு
பேஸ்ட் 2 :
2 டேபிள்ஸ்பூன் துருவிய தேங்காயை , தண்ணீர் விட்டு மிக்ஸியில் பேஸ்டாக அரைத்து வைத்துக் கொள்ளவும் .
பொடி :
2 டீஸ்பூன் வெந்தயத்தை வெறும் வாணலியில் கருகாத அளவுக்கு வறுத்து, பொடி செய்து கொள்ளவும் .
🔶செய்முறை :
அடுப்பில் வாணலியை வைத்து அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி , பேஸ்ட் செய்யக் கொடுத்தவற்றை பிரவுன் நிறமாகும் வரை , வதக்கி ஆற வைத்து , மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு பேஸ்ட் பதத்திற்க்கு அரைத்து கொள்ளவும் . (பேஸ்ட் 1 , பேஸ்ட் 2 தனித்தனியாக அரைக்கவும் ) மீனை நன்கு கழுவி அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் தடவி தனியாக வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து , எண்ணெய் ஊற்றி சூடானதும் , தாளிக்க கொடுத்தவற்றைப் போட்டு தாளித்து , வெங்காயத்தை சேர்த்து நிறம் மாறும் வரை , நன்கு வதக்கவும் தொடர்ந்து , பூண்டைச் சேர்த்து, சிறிது நேரம் வதக்கி, நறுக்கிய தக்காளியை சேர்த்து அது ஜீஸ் ஆகும் வரை வதக்கவும் .
இத்துடன் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் , அரைத்து வைத்த முதல் பேஸ்ட் , புளிக்கரைசல் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும் . பச்சை வாசனை போக குழம்பு கொதித்ததும், உப்பு சேர்த்து , இரண்டாவது பேஸ்டைச் சேர்த்து சில நிமிடம் கொதிக்க விடவும் . மீன் விரைவாக வெந்துவிடும் . பிறகு வெந்தயப் பொடியைச் சேர்த்து குழம்பை கிளறி அடுப்பை அணைக்கவும்.
“சீலா மீன் ஆணம்”
என தலைப்பிட்டிருக்க வேண்டும்.
இது கீழையின் உணவு தானே…. அவ்வூர் சொல்லிலேயே வரையவேண்டும்.
“ஆணம்” என்பதே தூய தமிழ் என்பதை புரியவேண்டும்…