கீழக்கரையில் முதன்மை பூச்சியியல் வல்லுநர் ஆய்வு.. டெங்கு காய்ச்சல் எதிரொலி..

கீழக்கரையும், டெங்கு காய்ச்சலும் ஒன்றோடு ஓன்று ஒன்றிணைந்தது போல் பல வருடங்களாகவே நிரந்தர தீர்வு காண முடியாத ஒரு பிரச்சினையாகவே நீடித்து வருகிறது.  இப்பிரச்சினையை தொடர்ந்து கீழக்கரையில் முதன்மை பூச்சியியல் வல்லுநர் ஆய்வு மேற்கொண்டார்.

பொது சுகாதார துறையின் மூலம் கீழக்கரையில் காய்ச்சல்கள் தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்த கல ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பருத்திக்காரத்தெரு, வடக்குத்தெரு, கிழக்குத்தெரு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் கள் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களுக்குரிய கொசு தடுப்பு குறித்த அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி தீவிர கொசு ஒழிப்பு பணிகள் நகராட்சி பணியாளர்களை கொண்டு நடைபெற்றது.

இப்பணிகளைசென்னை முதன்மை பூச்சியல் வல்லுநர் செல்வராஜ் ஆய்வு செய்தார். உடன் மாவட்ட பூச்சியல் வல்லுநர் உதயகுமார்,கீழக்கரை சுகாதார ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி, இளநிலை பூச்சிகள் வல்லுநர் சேக்தாவூது, டாக்டர் பாரதி, செல்லக்கண்ணு ஆகியோர் சென்றனர்.

மேலும் பொதுமக்கள் கொசு ஒழிப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்ளப்பட்டது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..