Home செய்திகள் இராமநாதபுரம் மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக வழிகாட்டுதல் கருத்தரங்கம்..

இராமநாதபுரம் மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக வழிகாட்டுதல் கருத்தரங்கம்..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக வழிகாட்டுதல் கருத்தரங்கம்..

இராமநாதபுரம் மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக அரசு பொதுத்தேர்வு எழுதியுள்ள மாணவ, மாணவியர்களுக்கான மேற்படிப்பு, வேலைவாய்ப்பு சார்ந்த ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் (CAREER GUIDANCE COUNSELLING) கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன், இன்று இராமநாதபுரம் செய்யதம்மாள் பொறியியல் கல்லூரியில் (06.04.2017) துவக்கி வைத்தார்.

​இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் செய்யதம்மாள் பொறியியல் கல்லூரியில் இன்று (06.04.2017) பள்ளிக்கல்வித்துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அரசு பொதுத்தேர்வு எழுதியுள்ள மாணவää மாணவியர்களுக்கான மேற்படிப்புää வேலைவாய்ப்பு சார்ந்த ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் கருத்தரங்கினை துவக்கி வைத்தார்.

​கருத்தரங்கினைத் துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர் மாணவ, மாணவிகள் ஆக்கப்பூர்வமான வழிகளில் சிந்தித்து பாதையை அமைத்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் நீண்ட அறிவுரையை வழங்கினார்.

​இக்கருத்தரங்கில் இராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட 37 அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சார்ந்த ஏறத்தாழ 4,500க்கும் மேற்பட்ட 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.

​இக்கருத்தரங்கில் செய்யதம்மாள் பொறியியல் கல்லூரியின் தாளாளர் டாக்டர்.சின்னத்துரை அப்துல்லா முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.ஜெயக்கண்ணு வரவேற்றார். சென்னை காவேரி மருத்துவமனையைச் சார்ந்த இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர்.சி.சுந்தர், மருத்துவத்துறை சார்ந்த படிப்புகளுக்கான ஆலோசனைகளையும், அரசு கால்நடை மருத்துவர் டாக்டர்.ஆர்.ஜெயப்பிரகாஷ் கால்நடை மருத்துவத்துறை சார்ந்த படிப்புகளுக்கான ஆலோசனைகளையும், வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் பி.ராஜா வேளாண்மைத்துறை சார்ந்த படிப்புகளுக்கான ஆலோசனைகளையும்,  செய்யதம்மாள் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர்.பி.மாரிமுத்து பொறியியல் துறை சார்ந்த படிப்புகளுக்கான ஆலோசனைகளையும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை உதவி இயக்குநர் அபுபக்கர் சித்திக் அலங்கானூர் அரசு மேல்நிலைப்பள்ளி முதுநிலை ஆசிரியர் கே.செந்தில்குமார் ஆகியோர் சுய முன்னேற்றத்திற்கான ஆலோசனைகளையும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கினார்கள். செய்யதம்மாள் பொறியியல் கல்லூரியின் துணை முதல்வர் எம்.பெரியசாமி நன்றி கூறினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!