கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் 26வது பட்டமளிப்பு விழா..

கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் 26வது பட்டமளிப்பு விழா இன்று (05-04-2017) காலை 09.30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் இனிதே நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி இறைவணக்கத்துடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து முதல்வர் முனைவர்.சுமையா வரவேற்புரையுடன் நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது. முதல் நிர்வாகிகள் கல்லூரியின் ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து பட்டமளிப்பு விழா உறுதி மொழியுடன் பட்டமளிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. பட்டமளிப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர். கிருஷ்ண பாஸ்கர் கலந்து கொண்டு பட்டதாரிகளுக்கான பட்டங்களை வழங்கினார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் 450 இளநிலை பட்டதாரிகளுக்கும், 65 முதுநிலை பட்டதாரிகளுக்கும், 4 முதுநிலை தத்துவவியல் பிரிவு மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கல்லூரித் தாளாளர் ரஹ்மத் நிஷா அப்துர்ரஹ்மான் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியல் கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் தேசியக்கீத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..