கிழக்குத் தெரு மதரஸாவில் நடைபெற்ற கல்வி குறித்த விழிப்புணர்வு கலந்தாய்வு நிகழ்ச்சி

கீழக்கரை கிழக்குத் தெருவில் செயல்படும் அல் மத்ரஸத்துல் அரபிய்யதுஜ் ஜெய்னபிய்யா அரபி மதரஸாவில் 1/4/2017 அன்று மாலை 5 மணியளவில் கல்வி குறித்த விழிப்புணர்வு கலந்தாய்வு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

மதரஸா நிர்வாக அறங்காவலர் ஹைருன்னிஸா தலைமை வகித்தார். மீரா பானு, செய்யது ஜகுபர் பாயிஸா முபல்லிகா ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். மௌலவி அப்துஷ் ஷக்கூர் ஆலிம் மன்பஈ கிராஅத் ஓதி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.

சிறப்பு விருந்தினராக தீனியா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி நிர்வாக மேலாளர் முஹையதீன் அப்துல் காதர் கலந்து கொண்டு கல்வி விழிப்புணர்வு குறித்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மௌலவி ஷெய்கு கஸ்ஸாலி ஆலிம் சதகீ செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் மதரஸா மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.