தமிழக அரசின் பொது விநியோக திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போஸ்டர் வெளியீடு

தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் முதன்மை குறிக்கோளாக, எல்லா குடிமக்களுக்கும் குறிப்பாக ஏழை மக்களுக்கு உணவு வழங்குதல் இருக்கிறது. அதே போல் பொது விநியோக திட்டம் மூலமாக அத்தியாவசியமான பொருட்களை மலிவான விலையில் ஒவ்வொரு மாதமும் நியாய விலைக் கடைகள் மூலம் ஏழை மக்களுக்கு வழங்குகிறது.

மேலும் தமிழ்நாட்டில் உள்ள நீடித்த பட்டினி மற்றும் உணவு பற்றாக்குறையை நீக்கவும், அத்தியாவசியமான பொருட்களின் விலை உயர்வால் வரும் தவறான விளைவுகளில் இருந்து குடிமக்களை பாதுகாக்கவும், அத்தியாவசியமான பொருட்கள் வழங்குதல் மூலம், நுண் ஊட்டச்சத்து குறைப்பாட்டை குறைக்கவும், உள்நாட்டு எரிபொருள்களை (மண்ணெண்ணை மற்றும் எல்பிஜி) மலிவாக வழங்கவும் பொது விநியோக திட்டத்தின் மூலம் பல்வேறு சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது அதன் சாராம்சமாக பொதுமக்கள் தங்கள் ரேஷன் கடையில் வழங்கப்படும் அத்தியாவசிய பொருளைகளின் அளவுகளை குறித்தும், பொது விநியோக திட்டத்தின் மூலம் பல்வேறு சேவைகளை எவ்வாறு பெறுவது என்பது சம்பந்தமாகவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கூட்டுறவுத் துறையினரின் மூலம் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இவை தமிழகத்தின் அனைத்து தாலுகாவில் செயல்படும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் ஒட்டப்பட்டுள்ளது. கீழக்கரை நகரிலும் கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் செயல்படும் வட்ட வழங்கல் அலுவலகத்தில் இது சம்பந்தமான விழிப்புணர்வு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..