உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து கீழக்கரை நெடுஞ்சாலை டாஸ்மாக் மூடல் – ஜனநாயகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி – மக்கள் நல பாதுகாப்பு கழகம் கருத்து

தமிழகம் முழுவதும் உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து நெடுஞ்சாலையில் உள்ள 3400 டாஸ்மாக் கடைகளை நடவடிக்கையில் அதிகாரிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் 124 மதுக்கடைகள், நெல்லை மாவட்டத்தில் 166 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் 33 கடைகள், திருவள்ளூர் மாவட்டத்தில் 75 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

மேலும் தூத்துக்குடியில் நெடுஞ்சாலை ஓரம் இருந்த 84 மதுக்கடைகள் மூடப்பட்டன. இராமநாதபுரம் மாவட்டத்திலும் நெடுஞ்சாலை கடைகள் மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கீழக்கரை – இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் மின்சார வாரிய அலுவலகம் அருகே அமைந்திருக்கும் டாஸ்மாக் மதுபானக் கடை (கடை எண் : 6983) இன்று இழுத்து மூடப்பட்டுள்ளது.

கடந்த 16.12.2016 அன்று உச்ச நீதிமன்றமும் மார்ச் 31 க்குள் மாநில நெடுஞ்சாலைகளில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக அகற்ற ஆணை பிறப்பித்திருந்தது. ஆனால் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு மூடு விழா நடத்தாமல் டாஸ்மாக் நிர்வாகத்தினர் காலம் தாழ்த்தி வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் உச்சநீதி மன்றத்தில் இது சம்பந்தமான வழக்கு விசாரணைக்கு வந்தது. இது குறித்து கடந்த வாரம் நம் தளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

நெடுஞ்சாலை டாஸ்மாக் கடைகள் மூடுவது சம்பந்தமாக இன்று உச்ச நீதிமன்றம் விசாரணை – கீழக்கரை நெடுஞ்சாலை டாஸ்மாக் இழுத்து மூட உத்தரவு வருமா..?

இது குறித்து மக்கள் நல பாதுகாப்பு கழகத்தின் தலைவர் A.M.S தமீமுதீன் கூறுகையில் ”இந்த நெடுஞ்சாலை டாஸ்மாக் கடையில் மது அருந்தும் குடிமகன்களால் அதிகளவில் சாலை விபத்துகள் நடைபெற்று வருவதை சுட்டிக் காட்டி கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஜனநாயக ரீதியில் போராடி வருகிறோம். எங்களோடு கை கோர்த்து கீழக்கரை சட்டப் போராளிகள் தளமும் தொடர்ந்து இந்த டாஸ்மாக் கடையை இழுத்து மூட போராடி வந்துள்ளனர்.

அதே போல் பல்வேறு சமூக இயக்கங்களும்த, சமூக அக்கறை கொண்ட நல்லுள்ளங்களும் இதற்காக பெரும் முயற்சி எடுத்தனர். தற்போது உச்ச நீதி மன்ற உத்தரவை அடுத்து இந்த அபாய டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளது உண்மையாகவே ஜனநாயகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி.” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

கீழக்கரை இராமநாதபுரம் நெடுஞ்சாலையில் பயணிக்கும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவித்து வந்த இந்த அபாய நெடுஞ்சாலை டாஸ்மாக் மதுபானக் கடையை இழுத்து மூட உத்தரவிட்டு நீதியை நிலைநாட்டிய மேதகு நீதிவான்களுக்கும், கீழக்கரை சட்டப் போராளிகளுக்கும், மக்கள் நல பாதுகாப்பு கழகத்தினருக்கும், சமூக அமைப்பினருக்கும், நல்லுள்ளம் கொண்ட பொதுநல அக்கறை கொண்டவர்களுக்கும் கீழை நியூஸ் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம்.

மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்தினர், மக்கள் நல பாதுகாப்பு கழகத்தினருக்கு கடந்த 20.01.2017 அன்று அனுப்பியிருந்த தகவல் 

1 Comment

Comments are closed.