கீழக்கரையில் தனியார் நிறுவனம் சார்பாக தாகத்தை தீர்க்க நீர் மோர் பந்தல் திறப்பு

கீழக்கரை முஸ்லீம் பஜாரில் இயங்கி வரும் தனியார் நிறுவனமாக தமினா ஸ்டைன்லஸ் ஸ்டீல் சார்பாக ஒவ்வொரு வருடமும், கோடை காலங்களில் பொதுமக்களின் தாகத்தை தீர்க்க, வாரந்தோறும் வெள்ளி கிழமைகளில் நீர் மோர் பந்தல் திறக்கப்படுவது வழக்கம்.

அதே போல் இந்த ஆண்டும் கோடை வெயில் கொளுத்த துவங்கி விட்டதால் தற்போது இந்த தனியார் நிறுவனம் சார்பாக இன்று 31.03.17 நீர் மோர் பந்தல் துவங்கப்பட்டிருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு கிழக்குத் தெரு ஜமாஅத் துணை பொருளாளர் முஹம்மது அஜிஹர் தலைமை ஏற்று பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கி நிகழ்ச்சியை இனிதே துவங்கி வைத்தார்.

நீர் மோர் பந்தல் ஏற்பாடுகளை தமினா நிறுவனத்தின் நிறுவனர் சமூக ஆர்வலர் முஹம்மது சஹீது சிறப்பாக செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமாக பொதுமக்கள் கலந்து கொண்டு சில்லென்ற நீர் மோரை அருந்தி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை வாழ்த்தி சென்றனர்.

1 Comment

Leave a Reply

Your email address will not be published.