கீழக்கரையில் 100 ஆண்டுகள் பழமையான வணிக கட்டிடம் இடிப்பு – பேராபத்து ஏற்படும் முன் இடிக்கப்படுவதால் பொதுமக்கள் நிம்மதி

கீழக்கரையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பிரதான சாலைகளிலும், தெருக்களிலும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பழைய கட்டிடங்கள் பல இடங்களில் காணப்படுகிறது. பெரிய அளவில் வெடிப்புகளுடன் அதன் மதில் சுவர்களும், சாரமும் சிதலமடைந்து காணப்படுவதால் எந்நேரம் வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது.

இது குறித்து கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழகம் சார்பாக அரசு துறையினரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தொடர்ச்சியாக மனுக்களை அனுப்பி வருகின்றனர் . இந்நிலையில் கீழக்கரை செக்கடி பகுதியில் வடக்கு தெருவை சேர்ந்த தனியாருக்கு சொந்தமான 100 வருட பழமை வாய்ந்த வணிக கட்டிடம் தற்போது கட்டிட உரிமையாளர்களால் இடிக்கப்பட்டது வருகிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் 

கடந்த காலகட்டங்களில் இந்த கட்டிடத்தின் அபாய நிலையை சுட்டி காட்டி பல்வேறு செய்திகளை வெளியிட்டுள்ளோம். பள்ளி சிறுவர்களும், முதியவர்களும் இந்த அபாய கட்டிடத்தின் வழியே செல்வதை காணும் போது ‘இடிந்து விழுந்து விடுமோ..? என்று பொதுமக்கள் அச்சப்பட்டு வந்தனர். தற்போது பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.