அலட்சியப்படுத்தும் கட்டிட காண்ட்ராக்டர்கள்… மெத்தனப் போக்கில் கீழக்கரை நகராட்சி…

கீழக்கரையில் பல இடங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவது அனைவரும் அறிந்த விசயம்.  ஆனால் கட்டுமானப் பணியில் ஈடுபடும் நிறுவனங்கள் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை பற்றி எந்தவித கவலையும் இல்லாமல் வாகனம் செல்லும் வழியிலும், மக்கள் நடைபாதையிலும் கட்டுமான பணிகளுக்கு உரிய மண்,  செங்கல் போன்ற பொருட்களை கொட்டி வைப்பது வாடிக்கையான விசயமாகி விட்டது.

இதுபோன்ற காரியங்களால் வாகனங்கள் விபத்துக்குள் ஆவதும்,  பொதுமக்கள் காயப்படுவதும் அன்றாட விசயமாகி விட்டது.  இந்தக் காரியத்தில் நகராட்சி கட்டிட நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அவ்வாறு நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் சாலையில் செல்லும் வாகனங்களுக்கும்,  பொதுமக்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கும். நாம் இத்தளத்தில் பதிவிட்டிருக்கும் புகைப்படம் வடக்குத் தெருவில் உள்ள கொந்தகருணை அப்பா மணல் மேடு பகுதிக்கு செல்லும் முக்கிய பாதையில் இன்று (28-03-2017) எடுக்கபட்ட புகைப்படமாகும்.

இந்த சாலைகள் அமைக்க பல சமூக அமைப்புகள் பல வருடங்கள் போராடிய பின் போடப்பட்டதாகும்.  இதை முறைப்படி பாரமரிப்பது அரசாங்கம் மற்றும் பொதுமக்கள் அனைவருடைய கடமையாகும்.

இதுபற்றிய செய்திளை நம் கீழை நியூஸ் இணையதளத்தில் சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டு இருந்ததும் குறிப்பிடதக்கதாகும்.

கீழக்கரையில் போக்குவரத்துக்கு இடையூறு தரும் மணல் குவியல்களால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் !

புனித ரமலான் வாழ்த்துக்கள்..

1 Comment

1 Trackback / Pingback

  1. சாலையில் கொட்டப்படும் மணல் - தொடரும் அவலம்.. - KEELAI MEDIA AND ADVERTISEMENT PVT.LTD - www.keelainews.com (உலக செய்திகளின் நுழைவு வாயி

Comments are closed.