ராமநாதபுரம் மாவட்ட சதுரங்க கழகத்தின் சார்பாக மாநில செஸ் போட்டிக்கான தகுதி தேர்வு போட்டி – நேசனல் அகாடமி பள்ளியில் நடைபெற்றது

ராமநாதபுரம் மாவட்ட சதுரங்க கழகத்தின் சார்பாக மாநில செஸ் போட்டிக்கான தகுதி தேர்வு போட்டியாக மாவட்ட அளவிலான 11 வது செஸ் போட்டி ராமநாதபுரம் நேசனல் அகாடமி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற்றது. 5 பிரிவுகளாக 5 சுற்றுக்கள் நடைபெற்ற இப்போட்டிகளில் 42 பள்ளிகளில் இருந்து 9, 11, 13, 15, 17 ஆகிய வயதிற்கு உட்பட்ட 217 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் ராமநாதபுரம் செஸ் அசோசியேசன் துணைச் செயலாளர் சி. குணசேகரன் வரவேற்றார்.

நேசனல் அகாடமி பள்ளிகளின் ஆலோசகர் எஸ். சங்கரலிங்கம் தலைமையில் நேஷனல் மெட்ரிக் பள்ளி முதல்வர் எம். ராஜமுத்து, துணை முதல்வர் ராணி செஸ் அசோசியேஷன், பொருளாளர் ஆடிட்டர் ஜே. ரமேஷ் பாபு ஆகியோர் முன்னிலையில் பள்ளிகளின் தாளாளர் டாக்டர் செய்யதா அப்துல்லா போட்டியைத் துவக்கி வைத்தார்கள். இப்போட்டி 5 பிரிவுகளாக 5 சுற்றுக்கள் நடைபெற்றது. இப்போட்டிகளில் 42 பள்ளிகளில் இருந்து 9, 11, 13, 15, 17 ஆகிய வயதிற்கு உட்பட்ட 217 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட சதுரங்க கழகத்தின் தலைவர் டாக்டர் எஸ். எம். நூர் முஹம்மது தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ராமநாதபுரம் நேஷனல் அகாடமி ICSE பள்ளி முதல்வர் வி. ஜெயலக்ஷ்மி, ரெட் கிராஸ் புரவலர் என். ராமநாதன், சித்தார்கோட்டை ஹாஜி.வட்டம் அகமது இபுராகிம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி துணைச் சேர்மன் எஸ். ஹாரூன், ரெட் கிராஸ் புரவலர் கீழக்கரை அப்பா மெடிக்கல்ஸ் எஸ்.சுந்தரம், பரமக்குடி கல்வி மாவட்ட ஜே.ஆர்.சி. கன்வீனர் எஸ். அலெக்ஸ், செஸ் அசோசியேஷன் துணைத் தலைவர் வழக்கறிஞர் அழகு பாலகிருஷ்ணன், பொருளாளர் ஜே. ரமேஷ் பாபு ஆகியோர் முதல் மூன்றுஇடம் பெற்றவர்களுக்கு ரொக்க பரிசுகளையும், மெடல்களையும் 5 பிரிவுகளிலும் முதல் மூன்று இடம் பெற்ற மகளிர்களுக்கு சிறப்பு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினர்.

அதைத் தொடர்ந்து மாவட்ட செஸ் அசோசியேசன் துணைச் செயலாளர் திரு. தி. ஜீவா நன்றி கூறினார். செஸ் ஆர்பிட்டர்கள் ஜி. அதுலன், ஜெ. சாலமன் ரத்தின சேகரன், எம். திரவியசிங்கம் சங்கீதா மற்றும் ஹேமசுதா ஆகியோர் முன்னின்று போட்டிகளை நடத்தினர்.

இந்தப்போட்டியை கவிஞர் சி. மணிவண்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அத்துடன் மாவட்ட செஸ் அசோசியேசன் செயலாளர் எம். ராக்லாண்ட் மதுரம், மரைன் பொறியாளர். வி.சதீஷ் குமார், வி. அருண் குமார், எல். கருப்பசாமி, எம். பழனிக்குமார் ஆகியோர் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..