இந்திய-மலேசிய முஸ்லிம்களின் தொடர்புகள் பற்றிய ஆவண படம் – மலேசிய அரசு சார்பாக விரைவில் வெளியீடு

பன்னெடுங்காலமாக தொடர்ந்து வரும் இந்திய-மலேசிய முஸ்லிம்களின் இணைபிரியா தொடர்புகள் இன்றளவும் தொட்டுத் தொடருகிறது. இது குறித்த ஆவண படம் ஒன்றினை மலேசிய அரசு சார்பாக விரைவில் வெளிவர இருக்கிறது. இதன் முன்னோடியாக மலேசிய இந்திய முஸ்லிம் தேசிய பேரவை (பெர்மிம்) தாய்-சபை யினர் கீழக்கரை நகருக்கு வருகை தந்து அதன் தொன்மையை பற்றி ஆய்வு செய்தனர்.

மலேசிய அரசின் அங்கீகாரம் பெற்ற மலேசிய இந்திய முஸ்லீம்களின் அரசு சாரா அமைப்புகளின் தாய் சபையான பெர்மிம் பேரவை, மலேசிய இந்திய முஸ்லிம்களின் 40 க்கும் அதிகமான அமைப்புகளின் தாய் சபையாகும்.

கீழக்கரைக்கு வருகை தந்திருக்கும் மலேசிய இந்திய முஸ்லிம் தேசிய பேரவை சபையின் தலைவர் ஹாஜி. தாஜுதீன், பொருளாளர் ஹமித் ஜபருல்லா, உருப்பிணர் சைய்து முகமத், மலேசிய இஸ்லாமிய அமைச்சக பிரிவின் ஒளிப்பதிவாளர் முஹம்மது சாஆத் பின் அப்துல்லாஹ் உள்ளிட்டோர் கீழக்கரையின் தொன்மையை ஆய்வு செய்து படம் பிடித்தனர்.

முன்னதாக கீழக்கரை தாஸிம்பீவி மகளிர் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர்.டாக்டர் சுமையா தாவுத், சீதக்காதி டிரஸ்ட் மேலாளர் தாவூத்கான், வரலாற்று ஆய்வாளர் செய்யது அபுசாலிஹ், பொற்கிழி விருது பெற்ற சகோதரர்கள் கவிஞர் அப்துல் ஹக்கிம், தென்பாண்டி சீமையிலே, ஆட்சி பீடம் ஆசிரியர் அப்துர் ரஜாக் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அவர்களை வரவேற்றனர்.

இது குறித்து கீழக்கரை வரலாற்று ஆய்வாளர் செய்யது அபுசாலிஹ் கூறுகையில் ”மலேசிய வாழ் இந்திய முஸ்லீம்களின் தொடர்பு என்பது, ஆரம்பத்தில் 7ஆம் நூற்றாண்டில் அரபியர்களால் வணிகத்தில் தொடர்ந்து 13 ஆம் நூற்றாண்டில் மீண்டும் தமிழ் முஸ்லிம்களால் தனித்துவமாய் செழிப்புற்று விளங்கியதையும்,

வணிகத்தில் துவங்கிய தொடர்பு பின் வாழ்வியல், கலாச்சாரம், மார்க்கம், உணவு, கல்வியிலும் தொடர்ந்தது என்பதாக வரலாறு உள்ளது. அது கீழக்கரை, நாகை பகுதிகளை சார்ந்த வணிக பெருமக்களால் செழித்தது என்றால் அதில் மாற்று கருத்தில்லை.” என்று தெரிவித்தார்.

மேலும் மலேசிய தொடர்புடைய சில ஆதாரங்களையும் விளக்கி கூறிய வரலாற்று ஆய்வாளர் அபு சாலிஹ் கூறுகையில் ”ஈரான் நாட்டை சேர்ந்த தாஜுன் அவுலியா சாலிஹ் முகம்மது நிசாபூரி அவர்களின் மாணவர்களும் சன்மார்க்க மேதைகளுமான ரிபாயி பள்ளி செய்குமார்களான சேகு செய்யது சுல்தானுல் ஆரிபீன், சேகு செய்யது முகம்மது, சேகு செய்யது அகமது நெய்னார், சேகு செய்யது அகமது கபீர், சேகு முகம்மது, சேகு குல்சும் முகம்மது, சேகு அப்துர் ரஹ்மான், சேகு அலி முகம்மது, சேகு செய்யது இபுராகிம், சேகு பலுலுதீன், சேகு அலாவுதீன், சேகு ஜலாலுதீன், சேகு சம்சுதீன், சேகு கமருதீன், சேகு நூருதீன், சேகு முகம்மது இலியாஸ் மற்றும் பலர் இந்தோனேசியா, மலேசிய மலாக்காவிற்கு சன்மார்க்கம் பரப்ப பயணமாகி திரும்பியதையும், சுல்தானுல் ஆரிபீன், சேகு அலி முகம்மது, சேகு இலியாஸ், சேகு அலாவுதீன் மற்றும் கீழக்கரைவால் கப்பலோட்டியர்களான அன்றய முதலியார், நெய்னார்மார்களின் பிள்ளைகளான சிறார்கள் சிலரும் மலாக்கா மன்னரால் வெட்டி கொல்லபட்டதையும் அவர்களின் அடக்க இடம் மலேசிய பூலபெசர் தீவில் உள்ளதையும் சுட்டிகாட்டி விளக்கினார்.

அரபியர்கள், சோலியாக்கள், மலேசிய பூகி இனத்தவர், மாப்பிள்ளைகள், மாபர் மலபார் தொடர்பு உள்ளிட்ட ஏராலமான தகவள்களை அறிந்து பெற்ற குழுவினர், மாபர் கரையின் தொன்மையையும் அதன் புதையுண்ட வரலாற்றையும் கேட்டு வியந்து பாராட்டினர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..