கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக நடைபெற்ற இஸ்லாமிய தெருமுனை பயான் நிகழ்ச்சி

கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கம் சார்பாக நேற்று 24.03.17 இரவு மணியளவில் அத்தியிலை தெருவில் இஸ்லாமிய மார்க்க விளக்க தெருமுனை பயான் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் தவ்ஹீத் ஜமாலி ஆலிம் தலைமையேற்று சிறப்புரை ஆற்றினார். மேலும் மதரஸத்துல் ராழியாவின் மாணவர் முஹம்மது ஸஃப்வான் மார்க்க சொற்பொழிவாற்றினார்.

நிகழ்ச்சியில் இறுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடையளித்து மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளை சங்கத்தின் பொருளாளர் சட்டப் போராளி ஹமீது சல்மான் கான் மற்றும் சட்டப் போராளி அஸ்பாக் நல்ல முறையில் செய்திருந்தனர்.