பாதுகாப்பு கருதி சாலை விதி முறைகளில் அதிரடி மாற்றம் – அமீரக சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு

அமீரக தேசிய போக்குவரத்து அமைச்சகம் தற்போதுள்ள சாலை விதிகளின் சிலவற்றில் முக்கிய மாறுதல்களை செய்துள்ளது. அதன்படி, கீழ் வரும் நான்கு அம்ச சட்ட விதிமுறைகள் உடனடியாக அமீரகத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது.

1. நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளை வாகனங்களில் அவர்களுக்குரிய பிரத்தியேக இருக்கைகளிலேயே அமர வைக்க வேண்டும்.

2. 145 செ.மீ உயரமுள்ள குறைந்தபட்சம் 10 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட குழந்தைகள் மட்டுமே காரின் முன்னிருக்கையில் அனுமதிக்கப்படுவர். (முன்பு 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளை முன்னிருக்கையில் அமர வைத்தால் 400 திர்ஹம் மற்றும் 4 கரும்புள்ளிகள் அபராதமாக விதிக்கப்பட்டன)

3. சட்டவிரோதமாக பயணிகளை ஏற்றிச்சென்றால் தற்போது 3000 திர்ஹம் அபராதம், 24 கரும்புள்ளிகள் மற்றும் 1 மாதத்திற்கு வாகனம் முடக்கப்படும் என கடுமையாக்கப்பட்டுள்ளது. (முன்பு 200 திர்ஹம், 4 கரும்புள்ளிகள் மற்றும் 7 நாட்கள் வாகன முடக்கம் மட்டுமே தண்டனையாக வழங்கப்பட்டது)

4. முன்னிருக்கையில் அமர்ந்துள்ள டிரைவரைப் போலவே முன்னிருக்கை பயணியும் பாதுகாப்புப் பட்டியை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். தற்போதுள்ள நடைமுறைப்படி 400 திர்ஹம் அபராத்துடன் 4 கரும்புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..