கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை (KECT) மற்றும் அல்மதரஸத்துல் முஹம்மதியா (NASA Trust) நடத்தும் கோடைகால பயிற்சி வகுப்புகள்…

கீழக்கரையில் ஒவ்வொரு வருடமும் பல கல்வி நிலையங்கள் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்துவதுண்டு. இந்த வருடம் கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை (KECT) மற்றும் வடக்குத் தெரு சமூக தர்ம அறக்கட்டளை (NASA Trust) கீழ் இயங்கி வரும் அல்மதரஸத்துல் முஹம்மதியா இஸ்லாமிய கல்வி நிலையமும் இணைந்து கோடைகால பயிற்சி வகுப்புகள் நடத்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த இரு கல்வி அமைப்புகளும் கடந்த வருடங்களில் நடத்திய கோடைகால இஸ்லாமிய சிறப்பு வகுப்புகளில் பல மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வகுப்புக்கள் மே மாதம் 1ம் 2ம் தேதி முதல் தொடங்குகிறது, மேலும் விண்ணப்பங்கள் ஏப்ரல் மாதம் 12ம் தேதி முதல் வினியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சிறப்பு வகுப்புகளில் குர்ஆன் மற்றும் நபி மொழி பாடங்கள், மார்க்க நெறிகள் மற்றும் ஒழுக்க நெறிகள் அனுபவம் வாய்ந்த ஆலிம்களால் நடத்தப்படும். இவ்வகுப்புகள் நிறைவடையும் பொழுது அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு நடத்தப்பட்டு சான்றிதழ்களும் வழங்கப்படும். மேலும் சிறந்த மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு பரிசுகளும் வழங்கப்படும்.