ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கத்தின் சார்பாக மருத்துவ பொருட்கள் உதவி..

ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கத்தின் சார்பாக கீழக்கரை நகர் கூட்டத்தில் பெருங்குளம் ரெட் கிராஸ் மருத்துவமனையின் தேவைகளுக்காக ரூபாய்.6000/- மதிப்பிலான மருந்து பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் டாக்டர் கே. எம். முரளி, மாவட்டதுணைத்தலைவர் ஆர். ஜி. சுப்பிரமணியன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் Y. S. சீனி சேகு, கீழக்கரை நகர் தலைவர் செல்வம், நகர் துணைத்தலைவர் ஜே. ஏ. பெருமாள், நகர் பொருளாளர் முஹம்மது இர்பான், நிஷா பவுண்டேஷன் எஸ். சித்திக், நகர் அமைப்பாளர் எம். கருப்பணன் மற்றும் மாவட்ட, நகர் நிர்வாகிகள் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் உதவிப் பொருட்களை ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம். ராக்லாண்ட் மதுரம் மற்றும் கீழ்க்கரை நகர் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளருமான அப்பா மெடிக்கல்ஸ் எஸ். சுந்தரம் ஆகியோரிடம் வழங்கினார்கள்.