அமீரகத்தில் புதிதாக மதிப்பு கூட்டல் வரி (VAT TAX) அமல்

அமீரகத்தில் அடுத்த வருடம் 2018 ஜனவரி 1 முதல் 5% மதிப்பு கூட்டல் வரி (VAT TAX) நடைமுறை படுத்தப்படும் என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

முதலீட்டாளர்கள், தொழிலதிபர்கள், சிறு தொழில், நடுத்தர தொழில் மற்றும் பல் தேசிய நிறுவனங்கள் மத்தியில் மதிப்பு கூட்டல் வரி (VAT) பற்றிய விளக்க கூட்டங்களுக்கு, விழிப்புணர்வு முகாம்களும்  ஓரிரு மாதங்களில் நிதி அமைச்சகம் திட்டமிடப்பட்டுள்ளது.

மதிப்பு கூட்டல் வரியை (VAT) முறையாக செயல்படுத்தவில்லை என்பதை கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களின் கணக்குகள் மற்றும் பண புழக்கத்தை வருமான வரி அதிகாரிகள் கூடுதல் ஆய்வு செய்த பிறகு அபாராதம் விதிக்கப்படுவார்கள் என்று வரி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அமீரகத்தில் மதிப்பு கூட்டல் வரி என்பது புதிய வழி முறை என்பதால் மாற்றங்களுகேற்ப கணக்குகளில் மறு கட்டமைப்பு செய்து கொண்டு தயார்படுத்தி கொள்ள வேண்டும் என்று தொழில் முனைவோர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

இந்த வரித் தொகையை  மூன்று மாத இடைவெளியில்  மதிப்பு கூட்டல் வரி (VAT) தொகையை சம்பத்தப்பட்ட துறையில் செலுத்த  வேண்டும். அதே சமயம் ஒரு மில்லியன் டாலருக்கு மேல் பரிவர்த்தனை செய்யும் நிறுவனங்கள் மதிப்பு கூட்டல் வரியை முறையாக பதிவு செய்யப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.