கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் தேசிய ஒருநாள் தொழில்நுட்ப கருத்தரங்கம்.

கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் முதுநிலை கணிப்பொறி பயன்பாட்டியல் துறை சார்பாக தேசிய ஒருநாள் தொழில்நுட்ப கருத்தரங்கம் கல்லூரி டீன் முனைவர் முஹம்மது ஜஹாபர் தலைமையிலும் மற்றும் முதல்வர் முனைவர் அப்பாஸ் மைதீன் முன்னிலையிலும் நடைபெற்றது

கணிப்பொறி பயன்பாட்டியல் துறைத் தலைவர் முஹம்மது ரபி அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சென்னை, ஸ்மார்ட் லீடர்ஸ் இந்திய ஆட்சிய பணியாளர் பயிற்சியாளர் சரவணன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு இன்றைய தொழில் நுட்பங்களை பாதுகாப்பான முறையில் பயன்படுத்தி அதன் மூலம் பல புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து வீட்டிற்கும்,நாட்டிற்கும் பயன்படும் வகையில் செயல்பட வேண்டுமென கருத்தை வலியுறுத்தும் உரையாற்றினார்.

​கருத்தரங்கில் மாணவர்களின் அறிவுத்திறனை வெளிப்படுத்தும் விதமான தனித்திறன் வெளிப்பாடு, வினாடி வினா,  மென்பொருள் பிழை நீக்கம் உள்ளிட்ட பல தொழில்நுட்ப போட்டிகள் பல்வேறு கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்றது. வெற்றி பெற்ற கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் அப்பாஸ் மைதீன் பரிசுகளை வழங்கினார்.

​நிகழ்ச்சியின் நன்றியுரையை கணிப்பொறி பயன்பாட்டியல் துறை துணைப் பேராசிரியர் பாலசுப்பிரமணியன் வழங்கினார். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை கணிப்பொறி பயன்பாட்டியல் துறை துணைப் பேராசிரியர்கள் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் நஜ்முதீன் ஆகியோர் செய்திருந்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..