அமீரக காயிதே மில்லத் பேரவை மற்றும் கேரளம் KMCC அமைப்புகளின் மனித நேய பணி..

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அங்கீகாரம் பெற்ற அமைப்புகளான காயிதே மில்லத் பேரவை (தமிழ்நாடு மாநிலம்) மற்றும் கேஎம்சிசி (கேரள மாநிலம்) பல சமுதாய மற்றும் மனித நேய பணிகளை செய்து வருவது அனைவரும் அறிந்த விசயம்.

சமீபத்தில் அமீரக தலைநகர் அபுதாபியில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள மேலையூர் கிராமத்தைச் சார்ந்த சாமிநாதன் கடந்த மார்ச் 1 ஆம் தேதி என்பவர் மரணம் அடைந்து விட்டார். அவரது உடல் ஷேக் கலீஃபா மருத்துவமனை பிரேத கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது. தாயகத்தில் இருந்து அவரது உறவினர்கள் பிரதத்தை அனுப்பி வைக்க அமீரகத்தில் உள்ள தமிழக நண்பர்களின் உதவியை நாடினர்.

அதன் தொடர்பாக அமீரக காயிதே மில்லத் பேரவை மற்றும் கேரள மாநில அமைப்பான KMCC நிர்வாகிகள் முயற்சியால் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு அமீரகத் தலைநகர் அபுதாபியில் மரணமடைந்த தஞ்சை சாமிநாதன் உடல் மார்ச் 10ஆம் தேதி காலை அவருடைய சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது சம்பந்தமான ஆவணங்கள் மற்றும் பயண ஏற்பாடுகளையும் செய்து, பாக்கியராஜ் என்பவரையும் பிரேதத்தை ஊரில் கொண்டு சேர்க்க அனுப்பி வைத்தனர்.

இப்பணிகளை மேற்கொண்ட அமீரக காயிதே மில்லத் பேரவை அபுதாபி மண்டல அமைப்புச் செயலாளர் ஆவை.ஏ.எஸ்.முஹம்மது அன்சாரி, கேம்சிசி நிர்வாகி அபூபக்கர், ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர் சாதிக் பாட்ஷா ஆகியோர் மிக துரிதமாக மேற்கொண்டனர். இந்த மனித நேய பணிக்கு உதவிய அனைவருக்கும் மறைந்த சாமிநாதன் குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.